Thursday, January 12, 2012

நண்பன் - சினிமா விமர்சனம் : Nanban Tamil Movie Review


நண்பன் - அமைதியான வெற்றி -சினிமா விமர்சனம் by : சி.பி.செந்தில்குமார்

http://1.bp.blogspot.com/-DaD1xrxq6pk/TwJkYRq63nI/AAAAAAAACyc/CYNmDIX2JMM/s1600/Nanban+movie+stills+nanban.jpg

ஆர்ப்பரிக்கும் அருவியை இயற்கையின் படைப்பாகிய பாறைகள் அமைதிப்படுத்தி ஓடை ஆக்கும்போது, நதியாகி ஓட வைக்கும்போது நீர் நிலைகள் அமைதியான அழகு பெறுகின்றன.. தமிழ்த்திரை உலகில் ரஜினிக்கு அடுத்து மாஸ் ஹீரோ  அந்தஸ்து உள்ளவரும்,கிராண்ட் ஓப்பனிங்க் வேல்யூ உள்ளவருமான விஜய்  எந்த விதமான ஹீரோயிசம், பஞ்ச் டயலாக்ஸ், சண்டைக்காட்சிகள் இல்லாமல் சேரன் போல் யதார்த்த நாயகனாக கதைக்கு என்ன தேவையோ அதை மட்டும் கொடுக்கும் அண்டர் ப்ளே ஆக்டிங்க் ஹீரோவாக   நடித்ததற்காக அவரையும், அப்படி நடிக்க வைத்ததற்கு ஷங்கரையும் பாராட்டலாம்.. 
கொஞ்சம் ஏமாந்தால் சச்சின், பறவைகள் பல விதம், கல்லூரி வாசல், ஏப்ரல் மாதத்தில் மாதிரி ஒரு சாயல் வந்து விடும் அபாயம் உள்ள கல்லூரி கேம்பஸ்-இல் நடக்கும் இளமையான கதைதான்.. 

எல்லாம் நன்மைக்கே ( ALL IS WELL) என்று நினச்சாலே போதும் , வாழ்க்கைல ஜெயிச்சுடலாம் என்ற நேர்மறை எண்ணம் கொண்ட இளைஞன் - நம்ம மனசுக்குப்பிடிச்ச வாழ்க்கையைத்தான் வாழனும்,மனசுக்குப்பிடிச்ச வேலையைத்தான் நாம தேர்வு செய்யனும்கற  கொள்கை கொண்ட இளைஞன் -சுத்தி இருக்கற நண்பர்களுக்கும், மனிதர்களுக்கும் தன்னாலான  ஆலோசனை, உதவி செய்யும் குணம் உள்ள நல்ல மனிதனின் கல்லூரிக்கதைதான் படம்.. 

http://datastore04.rediff.com/h450-w670/thumb/69586A645B6D2A2E3131/lt4grd3lugjc9q2t.D.0.Vijay-Nanban-Movie-Stills.jpg

எஞ்ஜினியர் காலேஜ் முதல்வர் சத்யராஜ்  ஒரு கட்டுப்பட்டியான, வறட்டுப்பிடிவாதம் உள்ள ரூல்ஸ் & ரெகுலேஷன் ராமானுஜம், மயக்கம் என்ன பட ஹீரோ தனுஷ் மாதிரி விலங்குகளை புகைப்படம் எடுக்க ஆர்வம் உள்ள ஃபோட்டோகிராஃபரான ஸ்ரீகாந்த் அப்பாவின் ஆசைக்காக இஞ்சினியரிங்க் காலேஜில் சேர்ந்து படிக்கிறார்.. வறுமை நிலையில் குடும்பம் இருந்தாலும், வாரிசு பெருமை நிலையில் இருக்க வேண்டும் என்ற எண்ணம் உள்ள பெற்றோருக்குப்பிறந்த ஜீவா  படிப்பில் சுமார் ரகம் என்றாலும் எஞ்சினியர் காலேஜில் சேர்கிறார்.. படிப்பில் நெம்பர் ஒன்னாக இருந்தாலும் கல்லூரி நிர்வாகத்தின்  கல்வி முறை , பயிற்றுவிக்கும் முறை இவற்றில் மாற்றம் வேண்டும் என நினைக்கும் காலேஜ் ஸ்டூடண்ட்டாக விஜய்..  இவர்கள் 4 பேரின் மோதல் , காமெடி கலாட்டாக்கள் தான் கதை.. 

அய்யய்யோ, அப்போ இலியானாவுக்கு என்ன வேலை என யாரும் பதற வேணாம்.. அவரை சத்யராஜின் மகள் ஆக்கிட்டா மேட்டர் ஓவர் என்பது இயக்குநருக்கு நல்லா தெரிஞ்சிருக்கு.. காமெடிக்கு சத்யன்.. 

படத்தில் உள்ள முக்கியமான 6 பேரில் நடிப்பில் முதல் இடம் சத்யராஜ்க்கே.. படத்தின் முதல் பாதியில் கனம் கோர்ட்டார் அவர்களே பட கெட்டப்பை நினைவு படுத்துவது போல் ஆள் சீரியஸாக இருந்தாலும் நமக்கு சிரிப்பு வர வைக்கும் பாடி லேங்குவேஜ் .. நடிப்பு, வசன உச்சரிப்பு என மனிதர் ஜமாய்க்கிறார்.. பின் பாதியில் வில்லாதி வில்லன் பூ கேரக்டர் போல் கெட்டப்.. அந்த கெட்டப் வந்ததுமே ஆட்டோமேடிக்காக அவர் கண்களில் , முகத்தில் வில்லன் களை தாண்டவம் ஆடுகிறது.. சபாஷ் சத்யராஜ்...

அடுத்து விஜய்.. காவலன் படத்திலாவது ஃபைட் இருந்துச்சு, இதுல அதுவும் இல்லை.. இருந்தாலும் திரைக்கதை, பாத்திர வடிவமைப்பு எல்லாம் பக்க பலமாக இருப்பதால் ரசிக்க வைக்கும் அமைதியான நடிப்பை தருகிறார்.. கொஞ்சம் ஏமாந்தா புதிய கீதை ரேஞ்சுக்கு போர் அடிக்கும் உபதேசவிலாஸ் உப்பிலி கேரக்டர் ஆகி இருக்கும்.. நூல் இழையில் தப்புகிறார்.. ஒளிப்பதிவாளரின் ஒத்துழைப்பில் ரொம்ப நாட்களுக்குப்பிறகு அழகான விஜயை பார்க்க முடிகிறது.. 

3 வது இடம் சத்யனுக்கு.. செம காமெடி ரவுசு பார்ட்டிப்பா.. இவர் வந்தாலே தியேட்டர் களை கட்டுகிறது.. க்ளைமாஸில் செம நடிப்பு.. இவர் டயலாக் டெலிவரி, கணீர்க்குரல் நல்ல பிளஸ்.. 

ஜீவாவும், ஸ்ரீகாந்த்தும் சம அளவு வாய்பு, + நடிப்பு.. கொடுத்த பாத்திரத்தை உணர்ந்து அழகாக செஞ்சிருக்காங்க.. 13 வருடங்கள் முந்திய கதையிலும் சரி, நிகழ்கால கதையிலும் சரி இருவரின் கெட்டப் சேஞ்ச், பாடி லேங்குவேஜ் மாறம் எல்லாம் பக்கா.. ( ஆனா ஹீரோ விஜய் அந்த அளவு மெனக்கெடலை.. நோ கெட்டப் சேஞ்ச்..)

கடைசில ஊறுகாய் இலியானா.. அழகு பொம்மை தான் நோ டவுட்.. ஆனா அவருக்கான ஆடை வடிவமைப்பு, சில கேமரா கோணங்கள் அவர் கொஞ்சம் “சின்ன” பொண்ணு என்பதை உணர்த்தி விடுவதால் எள்ளலான புன்னகையுடன் தமிழ் ரசிகர்கள் ரசிக்கிறார்கள்.. ( தமிழனுக்கு குஷ்பூ மாதிரி, ஹன்சிகா மாதிரி கொழுக் மொழுக் பெண்களே கனவுக்கன்னி)

இவர் துணிச்சலான ஹீரோயின் என்பதை காட்டுவதற்காக விஜய் உடன் ஒரு லிப் டூ லிப் சீன்  வெச்சிருக்காங்க.. 

http://cybernila.files.wordpress.com/2010/02/ileana-pink-saree-small.jpg

இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்

1. ஒரே சமயத்தில் 2 கைகளாலும் , 2 கால்களாலும் எழுதும் திறமை படைத்த மல்டி பர்சனாலிட்டி ஆளாக சத்யராஜின் பாத்திர வடிவமைப்பு தமிழுக்கு புதுது.. 

2. ஏழையான ஜீவாவின் அம்மா நண்பர்கள் குழாமுக்கு உணவு பரிமாறும்போது விலை வாசி உயர்வை பட்டியல் இடும் கேரக்டராக காட்டி அவர்களை தர்மசங்கடத்துக்கு ஆளாக்கும் சீன் நச்.. 
3. ஓப்பனிங்க் ஷாட்டில் ஊட்டியை நோக்கி  பயனப்படுகையில் ஏரியல் வியூ ஷாட்டாக ஹேர்ப்பின் பெண்ட் 12 வளைவுகளை அட்டகாசமாக படம் பிடித்த ஒளிப்பதிவாளரை உபயோகப்படுத்திய விதம்.. 

4. அஸ்கு புஸ்கு பாடல் காட்சியில் விஜய் -இலியானாவை யாரும் கவனிக்க வைக்காமல் குரூப்டேன்சர்களை உற்றுப்பார்க்க வைக்கும் அளவு கண்களை உறுத்தாத கிளாமரில் ஃபிரெஸ் பெண்கள் அதாவது இதுவரை நாம் திரையில் பார்க்காத புது பெண்களை களம் இறக்கி இருப்பது.. இது வரை வந்த ஷங்கர் படங்களில் இந்த பாடல் காட்சி தான் உயர்ந்த பட்ச கிளாமர் காட்சி கொண்ட படம்.. 

5.  ஆல் ஈஸ் வெல்  பாடல் காட்சி படமாக்கப்பட்ட விதம் , ஒளிப்பதிவு, நடன  அமைப்பு அனைத்தும் இதம்.. 

6. ALL IS WELL பாடலில் வடையில் இருந்து வரும் நூலில் இருந்து பட்டம் விடுவது நல்ல நகைச்சுவை..

7. சத்யன் ஞான சூன்ய லேகியம் சாப்பிடுவதும்.. கற்பித்த முதல்வர் என்று பேசுவதற்குப்பதில் கற்பழிக்கும் என மாற்றிப்பேசுவதும், கல்வி அமைச்சரை கலவி அமைச்சர் என கலாய்க்கும் அந்த 10 நிமிஷ விழா மேடை காமெடி கலக்கல் ரகம்.. 

8.  விஜய் இலியானா காதல் காட்சியில் ஜீவா பேசக்கூடாது... நினைத்தாலே இனிக்கும் போன்ற ஹிட் சாங்க்சை எடுத்து விடுவதும் , குறும்பு கொப்பளிக்கும் காதல் காட்சியும்... 

9. இயக்குநர் ஷங்கரே ஒரு பாடல் காட்சியில் ஆஜர் ஆகி லொக்கேஷன் சேஞ்ச், கெட்டப்சேஞ்ச் பற்றி போர்டு வைத்து சுய எள்ளல் செய்து கொள்வது.. 

10. படத்தின் பின் பாதியில் ஹீரோவை படம் பூரா காட்டியே ஆக வேண்டும் என்ற  போலியான பதட்டம் ஏதும் இல்லாமல் திரைக்கதை தேவைக்கு மட்டும் அவரை உபயோகப்படுத்திய விதம்.. 

11. ஒரு பாடல் காட்சியில் ரயில் அலங்காரம், டிசைன் கலக்கல்.

12. க்ளைமாக்ஸில் விஜய்  மருத்துவ படிப்பறிவு இல்லாமல் இலியானாவின் அக்கா அனுயாவுக்கு லேப்டாப்பில் வரும் ஆர்டர்களை கொண்டே பிரசவம் பார்க்கும் பர பரப்பான படத்துக்கு ஜீவன் அளித்த முக்கிய காட்சியை உயிரோட்டமாக படம் பிடித்த விதம்..

13. ஜஸ்ட் 5 நிமிஷமே வந்தாலும் கலகலக்கவைக்கும் எஸ் ஜே சூர்யா நடிப்பு செம 

http://4.bp.blogspot.com/-SCphSQSe7ik/TYSTyWmEfxI/AAAAAAAABNM/Xl8GbrIe1ts/s1600/vijay-nanban-movie-stills-09.jpg

இயக்குநர் ஷங்கர் சார்.. யுவர் அட்டென்ஷன் ப்ளீஸ்.. ( லாஜிக் மிஸ்டேக்ஸ்)

1.  ஓப்பனிங்க் ஷாட்ல ஜீவா பேண்ட் போட அவசரத்துல மறந்துடறார், ஓக்கே, தர்மத்தின் தலைவன் ரஜினி மாதிரி அவசரமா விஜயை பார்க்க ஸ்ரீகாந்துடன் ஸ்பாட்க்கு போறார்.. அங்கே அவர் இல்லை.. இதுவரை ஓக்கே, இனி ஊட்டி கிளம்பறாங்க.. சாவகாசமாத்தான் போறாங்க.. போற வழில ஒரு பேண்ட் க்டைல வாங்கி போட்டுக்க மாட்டாரா? 179 கி மீ அப்படியே போவாங்களா? யாராவது?

2. விஜய் ராக்கிங்க் பண்ற சீனியர் ஸ்டூடண்ட்டை கலாய்க்க கரண்ட் ஷாக் கொடுத்த பின் ஸ்கேலை இடுப்புக்கு கீழ் பிடிச்சுட்டு வர்றது ரொம்ப விரசமா இருக்கு.. சிங்கார வேலன் படத்துல இதே மாதிரி கமல் புதுச்சேரி கச்சேரி எக்கச்சக்க  பாடலில் இடுப்புக்கு கீழே வைத்து ஆபாச அசைவு செய்து கெட்ட பேர் வாங்கிக்கொண்டார்.. அதை தவிர்த்திருக்கலாம்.. 

3.  காலேஜ்ல எல்லா ஸ்டூடண்ட்ஸும் நீட்டா சர்ட் அல்லது காலர் வெச்ச டி சர்ட் போட்டுட்டு வர்றாங்க. ஸ்ரீகாந்த், ஜீவா உட்பட.. ஆனா அண்ணன் விஜய் மட்டும் 5 வருஷமும் எப்பவும் காலர் இல்லாத ரவுண்ட் நெக் பனியன் போட்டுட்டுதான் வர்றார்.. அது எப்படி? காலேஜ்ல சனிக்கிழமை மட்டும் தான் அப்படி பனியன் போட முடியும்.. 

4.  ரியலிஸ்டிக்கா காட்றேன்னு சில காட்சிகளில் ஹீரோக்கள் 3 பேரும் காலேஜ் ஹாஸ்டல்ல ஷேவ் பண்றப்ப பாத்ரூம் போற மாதிரி பலர் நடந்துக்கறது உவ்வே.. 

5.  பயந்தாங்கொள்ளி என வர்ணிக்கப்படும் ஜீவா அவர் கைல போட்டிருக்கற 6  வெவ்வேற கலர்ல உள்ள தாயத்து கயிறைக்காட்டி விஜய் கிண்டல் பண்றார்.. ஆனா அந்த ஒரு சீனும், 20 நிமிஷம் கழிச்சு அதை கழட்ற சீனிலும் மட்டும் தான் தாயத்து கயிறு இருக்கு.. மற்ற அனைத்துக்காட்சிகளிலும் ஜீவா வெறும் கைல தான் இருக்கார்.. நோ தாயத்து.

6. இலியானா தான் வர்ற சீனிலெல்லாம் அவர் வெச்சிருக்கறது ஸ்கூட்டினு டயலாக் பேசறார், ஆனா விஜய் அதை ஸ்கூட்டர் என்கிறார்..

http://telugu-actress.com/wp-content/uploads/2011/06/Tollywood-Actress-Ileana-Dcruz-In-Saree-Picture.jpg

. 7.  சத்யராஜ் ஒரு திண்ணை மாதிரி சோபால படுத்து அடி ஆள் மூலமா ஷேவிங்க் பண்ற மாதிரி சீன் வருது 3 இடங்கள்ல , ஆனா எப்பவும் அவர் கன்னம் மழு மழுன்னுதான் இருக்கு.. அந்த சீன் டைம்ல மட்டுமாவது தாடி லைட்டா இருக்கற மாதிரி காட்டி இருக்கலாம்.. 

8.  ஜீவா கேம்பஸ் இண்டர்வியூவுல சொந்தக்கதை சோகக்கதையை எல்லாம் உருக்கமா சொல்றார்..  எந்த இண்டர்வியூவுல அதை எல்லாம் பொறுமையா கேட்கறாங்க..?

9.  தண்ணி அடிச்சுட்டு இலியானா பேசறப்ப ரொம்ப லோக்கலா சேரி பாஷை பேசுது ஒரு காலேஜ் பிரின்சிபாலோட பொண்ணு அதெப்பிடி?

10. வில்லனோட மாப்பிள்ளை டிரஸ் ஸை அயர்ன் பண்ற மாதிரி ஒரு சீன்.. பொதுவா மேரேஜ் அன்னைக்கு போடற டிரஸ் புதுசாத்தான் இருக்கும்.. அதை யார் அயர்ன் பண்ணுவாங்க.. அதுவும் அவர் ஒரு மல்ட்டி மில்லியனர்.. 

11.  பக்காவான ஐ டி இளைஞர் போல் காட்சி அளிக்கும் ஸ்ரீகாந்த் இஞ்சினியர் ஸ்டூடண்ட்.. ஒரு சீனில் ஜீவாவிடம் வண்டியை நிப்பாட்றா என்கிறார்.. இது லோக்கலா இருக்கே?

12.  கதை முழுக்க பேக் டிராப்ல ஸ்ரீ காந்த் கதை சொல்ற மாதிரி வைச்சிருக்காங்க.. அது தேவையும் இல்லை.. பல பிராப்ளம் வரும்.. ஏன்னா விஜய் இலியானா சந்திப்புகள்ல அவங்க 2 பேரையும் தவிர யாரும் இல்ல.. அந்த மேட்டர் எல்லாம் எப்படி ஸ்ரீகாந்துக்கு தெரியும்?

13. படத்தில் பாடல் காட்சிகளில் சில செகண்ட்களில் வரும் கோமாளி மாதிரி கெட்டப்பை போஸ்டராக ஒட்டி இருப்பது என்னை பொறுத்தவரை  ஒரு மைனஸ் தான்.. இன்னும் நல்லா இந்தப்பட போஸ்டர் டிசைனிங்கை செஞ்சிருக்கலாம்.. ஏன்னா வ்ழக்கமான ஷங்கர் பட ஓப்பனிங்க்  மற்றும் எதிர்பார்ப்பு குறைந்ததற்கு இந்த படத்துக்கு வடிவமைக்கப்பட்ட போஸ்டர் டிசைன் முக்கிய பங்கு வகிக்கும்..

14. ரீமேக்னா ஷங்கர் நீங்க கூட அட்டக்காப்பி அடிக்கனுமா? ராகிங்க் சீன்ல பசங்க அடிக்கடி பேண்ட்டை  கழட்டி உள்ளாடையுடன் நிற்பது காமெடியா? அந்த சீனை இன்னும் கண்ணியமா காட்டி இருக்கலாமே?

15.  காமெடி என்ற பெயரில் சில இடங்களில் முகம் சுளிக்க வைக்கும் வசனங்கள் ஏன்?

http://2.bp.blogspot.com/_BMXwnaCMtOo/SWsP65M5LyI/AAAAAAAACwM/5EomAmt4X6A/s800/Anuya10.jpg

ஓவர் பில்டப் எல்லாம் இல்லாம அமைதியா வந்த படம் என்பதால் போக போக படம் பிக்கப் ஆகிக்கும்னு தோணுது.. 2012 ஓப்பனிங்கில் விஜய்க்கு கிடைத்த ஆரோக்யமான வெற்றிப்படம்.. 

ஏ செண்டர்களில் 75 நாட்கள். பி செண்டர்களில் 50 நாட்கள், சி செண்டர்களில் 20 நாட்கள் ஓடலாம்.. 

ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 42

குமுதம் அதிர்பார்ப்பு விமர்சனம் - ஓக்கே

சி.பி கமெண்ட் - குடும்பத்துடன் அனைவரும் பார்க்கலாம்..

http://s3.hubimg.com/u/3271474_f520.jpg

டிஸ்கி -1 படத்தில் ஷங்கர் எங்கே காணோம்? என யாரும் கேட்டுடக்கூடாதேன்னு ஒரு பாட்டு சீன்ல டைரக்டரா வந்து இலியானாவை டச் பண்ணி மூவ்மெண்ட் சொல்லித்தர்றாரு.. டைரக்‌ஷன் டச் ஹி ஹி

டிஸ்கி 2. - விஜய் தன் வாழ்நாளில் முதல் முறையாக யாரையும் அடிக்காமல், உதைக்காமல் , வதைக்காமல் அமைதியாக நடித்த ஒரே படம் ஹி ஹி

No comments:

Post a Comment