Friday, July 20, 2012

பாட்மான் திரைப்படம் தமிழ் விமர்சனம் | The Dark Knight Rises- ஜோக்கர் -பாகம்-2

நன்றி ராஜ் http://hollywoodraj.blogspot.com/


நோலன் பேட்மேன் சீரீசில் எடுத்த இரண்டாவது படம் The Dark Knight (2008). இந்த முறை நோலன் தன் பேட்மேன் படத்திருக்கு தேர்வு செய்த வில்லன் ஜோக்கர். காமிக்ஸ் படித்த அனைவருக்கும் தெரியும், ஜோக்கர் தான் பேட்மேன் வில்லன்களிலே மிகவும் முக்கியமான வில்லன் என்று. அதுவும் இல்லாமல் அதி புத்திசாலி வேறு. பேட்மேன் ஜோக்கரை பிடிக்க ஒரு மூவ் அல்லது பிளான் A தயார் செய்தால், ஜோக்கர் அதை முறியடிக்க  16 மூவ் மற்றும் பிளான் A, B, C, D என்று பல பிளான் தயார் செய்து வைத்து இருப்பான். பிளான் A தோல்வி அடைந்தால் பிளான் B, அதுவும் போச்சு என்றால் பிளான் C. இப்படியாக  பேட்மேனை கவிழ்க வரிசையாக பல ஐடியாகளை எப்பொழுதும் தயாராகவே வைத்து இருக்கும் கதாபாத்திரம் தான் ஜோக்கர்.
அளவுக்கு அதிகமான கிறுக்குத்தனம், எதிரியை உளவியல் ரீதியாக பயமுறுத்தி கொலை செய்வது, பணத்தின் மீது துளியும் ஈடுபாடு இல்லாதது போன்றவை ஜோக்கரில் சில பண்புகள். பேட்மேனை தன்னால் மட்டுமே விழத்த முடியும் என்ற அசாத்திய நம்பிக்கை ஜோக்கர்க்கு உண்டு. இந்த மாதிரியான உளவியல் கதாபதிரங்களை     செதுக்கி திரையில் கொண்டு வருவது என்றால் நோலன்க்கு அல்வா சாப்பிடுவது போல். மனுஷன் பின்னி விடுவார். பேட்மேன் சீரீஸ் தவிர்த்து நோலன் எடுத்த அணைத்து படங்களும் உளவியல் சம்பந்த பட்ட படங்கள் தான். 15 நிமிடங்களுக்கு மேல எதையும் ஞாபகம் வைத்து கொள்ள முடியாத Memento, தூங்க முடியாமல் அவதி படும் Insomania, மாஜிக் கலைஞர்களின்  ரகசியங்களை சொன்ன The Prestige போன்ற பல உளவியல் படங்களை நோலன் எடுத்து இருந்தார்.
இப்படியாக உளவியல் படங்களை எடுப்பதில் வல்லவரான நோலன் ஜோக்கர் கேரக்டர்ரை பெரிய திரையில் எப்படி கொண்டு வர போகிறார் என்ற எதிர்பார்ப்பும் இதற்கு முன்பு வந்த Batman Begins வெற்றியும் The Dark Knight (2008) படத்தின் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்தன. ஆனால் நோலன் அனைவரின் எதிர்பார்ப்பையும் தனது ஜோக்கர் கதாபாத்திரம் முலம் தகர்த்து எறிந்து விட்டார். இது வரை வந்த அணைத்து சூப்பர் ஹீரோ படங்களில்…. ஏன் இனி மேல வர போகும் அணைத்து சூப்பர் ஹீரோ படத்தின் வில்லனாலும் நோலனின் ஜோக்கர் கதாபாத்திர படைப்பின் அருகில் கூட வர முடியாது. இப்படி பட்ட சிறப்பு மிக்க ஜோக்கர் கதாபாத்திரத்தை நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தியவர் ஹீத் லெட்ஜர் (Heath Ledger).  The Dark Knight படத்தில் லெட்ஜர்  சும்மா அதகளம் பண்ணி இருப்பார். முகபாவத்தில் மட்டுமன்றி, உடலிலின் ஒவ்வொரு அங்கத்தினாலும் ஜோக்கருக்கு உயிரூட்டியிருபார் லெட்ஜர் .

The Dark Knight  படத்தில் முதல் காட்சி ஒரு வங்கி கொள்ளையில் ஆரம்பிக்கும். ஜோக்கர் மற்றும் அவனது கூட்டாளிகள் மொத்தம் ஐந்து பேர் சேர்ந்து அந்த கொள்ளையை நடத்துவார்கள். அனைவரும் மாஸ்க் அணிந்து இருப்பார்கள். பார்பவர்களுக்கு யார் ஜோக்கர் என்றே தெரியாது. கொள்ளை முயற்சி நடக்க நடக்க...ஒவொருவராய் மற்றவர்களை கொலை செய்து கொண்டே வருவார்கள். அணைத்து கொலைகளும் சரியான டைமிங்கில் நடக்கும். கடைசியில் மிஞ்சி இருப்பது மாஸ்க் அணிந்த ஒரே ஆள் தான். எல்லாம் முடிந்த பிறகு கடைசியில் அந்த ஆள் மாஸ்கை கழற்றுவான், அவன் தான் தி ஜோக்கர். அந்த வங்கி கொள்ளை காட்சியிலே நமக்கு தெரிந்து விடும், இது சாதாரண படம் கிடையாது... ஜோக்கரும் சாதாரண வில்லன் கிடையாது என்று.
அடுத்து ஜோக்கர் இந்த படத்தில் பேசும் வசனங்கள். இவர் பேச ஆரம்பதாலே நமக்கு திகில் பரவ ஆரம்பிக்கும்.  ஒரு இடத்தில கூட ரத்தத்தை காட்டி இருக்க மாட்டார் நோலன். ஆனால் படத்தில் மொத்தம் 36 கொலைகள் நடக்கும். அதில் பாதிக்கும் மேல் ஜோக்கர் செய்வது தான்.

ஒரு காட்சியில் பென்சிலை மறைய வைக்கிறேன் பார் என சொல்லி கொண்டே பென்சிலை மறைய வைக்கும் அதிரடியிலாகட்டும், கிறிஸ்டியன் பேல் விருந்தில் நடுவே  புகுந்து " Good evening, ladies and gentlemen. We are tonight's entertainment! " என்று படு ஸ்டைலாக வசனம் பேசியபடி ஹீரோயினை மிரட்டு அந்த காட்சி ஆகட்டும், ஹீரோயினை  அந்தரத்தில் தொங்க விட்டு விட்டு பேட் மேனிடம் “Ooh, very poor choice of words”  என்று சொல்லி பேட்மேன் காதலியை அப்படியே விட்டு விடுவது ஆகட்டும், பேட்மேன் தனது மாஸ்க்கை கழற்ற வேண்டி ஜோக்கர் செய்யும் அட்டகாசங்கள் ஆகட்டும், பேட்மேனிடம் மாட்டிய பிறகு அந்த விசாரணை அறையில் பேசும் வசனங்கள் ஆகட்டும், மருத்துவமனையுள் புகுந்து அதை வெடிக்க செய்வது என்று லெட்ஜர் பின்னி எடுத்து இருப்பார்.
இந்த படத்தை நான் ஹைதராபாத் IMAX யில் தியேட்டரில் பார்த்தேன். நான் IMAXயில் பார்த்த முதல் படம் இது தான். அந்த அனுபவம் மறக்கவே முடியாத அனுபவம். ஒரு காட்சியில் நோலன் ஹாங்காங் நகரை வானில் இருந்து காட்டி இருப்பார். அதை பார்க்கும் போது நாமும் அந்தரத்தில் மிதப்பது போன்று இருக்கும். சுருக்க சொன்னால் Gaint Wheel –லில் மேலே இருந்து கீழே வரும் போது வயிற்றில் பட்டாம்பூச்சி பறப்பது போன்று இருக்கும், அதே போன்ற அனுபவம் இந்த படத்தை IMAX யில் பார்க்கும் போது எனக்கு கிட்டியது.
Heath Ledger

எனக்கு பேட் மேன் கிறிஸ்டியன் பேலின் நடிப்பை விட ஜோக்கராய் நடித்த லெட்ஜர் நடிப்பு மிகவும் பிடித்து இருந்தது. இந்த படத்திற்கு தயார் செய்வதற்க்காக லெட்ஜர் தினமும் 15 மணி நேரம் தனியே ஹோட்டல் அறையில் பூட்டி கொண்டு பயற்சி செய்தாராம். படம் வெளி வருவதற்க்கு முன்று மாதங்கள் முன்பு அதிகமான டோஸ் கொண்ட மாத்திரைகளை எடுத்து காரணத்தால் இறந்து விட்டார். இந்த மாபெரும் நடிகர் The Dark Knight படத்திற்காக உயரிய விருதான ஆஸ்கார் விருதை பெற்றார்.
Let his Soul Rest in Peace....

No comments:

Post a Comment