Saturday, July 21, 2012

கேபிள் சங்கர் The Dark Knight Rises


The Dark Knight Rises

வழக்கமாய் நான் ஆங்கிலப் படங்களை தமிழ் டப்பிங்கில் பார்பவன் இல்லை. முக்கியமாய் பைலட் போன்ற தியேட்டர்களில் படம் பார்ப்பதையே தவிர்பவன் வேறு வழியில்லாமல் கிறிஸ்டபர் நோலன் படம் என்பதால் தமிழில் பார்க்க முடிவு செய்தேன். அதற்கு காரணம் நோலனின் படங்களில் வரும் திரைகக்தையை சப்டைட்டிலுடனோ, அல்லது தமிழ் டப்பிங் பார்த்தால் தான் பார்த்த மாத்திரத்தில் புரியும் அறிவு மட்டுமே இருப்பதால் இம்முறை தமிழ் வர்ஷனைப் பார்க்க முடிவுசெய்து பைலட்டுக்கு விட்டேன் என் வண்டியை.

இன்ஸ்செப்ஷனின் வெற்றியால் உலகம் முழுவதும் இந்த நோலனின் ப்டத்திற்கு எதிர்பார்ப்பு கூடியிருக்க, இந்த வாரம் வேறு தமிழ்படமே இல்லாததால் பேட்மேன் தமிழ், ஆங்கில வர்ஷன்ங்கள் எல்லாமே ஹவுஸ்புலலாகியிருந்தது. வேறு வழியில்லாமல் பைலடுக்கு போனேன். வழக்கம் போல ஐம்பது ரூபாய்க்கு டிக்கெட் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் முத ஷோ பார்த்த எவனோ நடக்கும் இடத்தில் வாந்தியெடுத்து வைத்திருந்தான். நல்ல வேளை என் சீட்டுக்கு அருகில் இல்லை. ஆனால் இந்த சம்பவம் எனக்கு ஏதோ ஒரு செய்தியை கொடுத்தது போல பட்டது. சரி. படத்தைப் பார்ப்போம் என்றால் ஸ்கீரின் சவுண்ட் படு லோவாக இருக்க, மொத்த தியேட்டரே “டேய்.. த்தா.. சவுண்ட வுடுறா” என்று கத்தியது. பின்பு ஏற்றிய பின்னும் பேட்மேன் பேசும் காட்சிகள் எல்லாம் படு மெலிதாய் கேட்டதால் மீண்டும் மக்கள் கத்தலில் வசனம் கேட்கவேயில்லை. 

சென்ற பகுதியில் பாம் வைத்து ஊரையே காலி செய்ய நினைத்த வில்லனின் வாரிசு பேட்மேனை பழி வாங்க வந்து ஊரையே அழிக்க, மீண்டும் பாம் வைக்க வருவதும், அதை எப்படி பேட்மேன் முறியடித்தான் என்பதை ஆர அமர இரண்டேமுக்கால் மணி நேரம் கதற, கதற சொல்லியிருக்கிறார்கள். படம் அவ்வளவு மொக்கையா என்று கேட்பவர்களும் அப்படி இல்லை என்றும் சொல்ல முடியாது என்று தான் சொலல் வேண்டும். இன்ஸ்செப்ஷன் பட பாதிப்பிலிருந்து வெளிவராமல் ட்விஸ்டு வைக்கிறேன் ட்விஸ்டு என்று மாய்ந்து மாய்ந்து ஆளாளுக்கு ஒரு குட்டிக் கதை சொல்கிறார்கள். என்ன எழவு அது எல்லாமே ஏற்கனவே பார்த்த விஷயமாகவே இருப்பதால் படு அசுவாரஸ்யமாய் இருக்கிறது.
இப்படத்தின் மிக முக்கியமான தோல்வி திரைக்கதையில்தான். பெரும்பாலான காட்சிகளில் பேட்மேனாய் வராமல் சாதாரணனாகவே வருவதும், முதல்பாதி முழுவது எல்லோரும் மாய்ந்து மாய்ந்து பேசிக் கொண்டேயிருப்பதும். ஏகப்பட்ட லூப்ஹோல்களுடனான திரைக்கதையினால் அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது உ.கை.நெ.கனியாய் தெரிவதால் சுத்தமாய் சுவாரஸ்யம் போய்விடுகிறது. அதிலும் பேட்மேன் ஒரு கயிற்றில் டைம்பாமை கட்டிக் கொண்டு, நடுக்கடலில் போய் வெடிப்பது போன்ற காட்சியெல்லாம் நாங்கள் மாடர்ன் தியேட்டர்ஸ் படக்காலங்க்ளிலேயே பார்த்துவிட்டதால் சிரிப்பாகத்தான் வருகிறது. தொடந்து வெற்றிப் படங்களாகவே கொடுத்து வந்த நோலனுக்கு திருஷ்டி பட்டு விட்டது. அதற்காக இப்ப்டி ஒரு அவர் லெவலுக்கான மொக்கை படத்தை கொடுத்திருக்க வேண்டாம். 
படத்தில் ஆங்காங்கே தமிழில் வரும் வ்சனங்கள் படம் கொடுக்காத சுவாரஸ்யத்தை கொடுத்தது. திடீரென வரம் கொடுத்தவன் தலையிலேயே கை வைச்சது போல என்றும், ஜெயிலில் கேட் உமனை , ஆண்கள் சிறையில் அடைக்க கொண்டு வரும் போது ஜன்னல் கம்பிகளிடையே இரண்டு கைகளை நீட்டியபடி ஒரு கைதி வா வா. என்று அழைக்க அவனின் இரண்டு கையை பிடித்து அப்படியே ஒரு அந்தர் பல்டி அடித்து கையியை முறித்துப் போடும் லாவகத்தைப் பார்த்து பின்னால் வரும் போலீஸ்காரர் சொல்வார் “நலல்வேளை அவன் கையைக் காட்டினான்” . இம்மாதிரியான சிற்சில சுவாரஸ்யங்களுக்காக இந்த படத்தை தமிழில் பார்க்கலாம்.
கேபிள் சங்கர்
டிஸ்கி: எல்லா பாம்களையும் கடலில் போடுகிறார்களே கடல் என்னாத்துக்கு ஆவுறது? இதையாரும் கேக்குறதேயிலலியா? 

No comments:

Post a Comment