தாண்டவம்
படம் வெளியாவதற்கு முன்பே பரபரப்பை வேறு விதமாய் ஏற்படுத்தியிருந்த படம். இது என் கதை, என்று ஒரு உதவி இயக்குனரும், இல்லை என்று இயக்குனரும் தயாரிப்பாளர் ஆளாளுக்கு ஆட்டம் ஆட ரகசியமாய் நடந்தத விஷயங்கள் வெளியே வர, இயக்குனர் சங்க தலைவர் ராஜினாமா செய்யும் அளவிற்கு விறுவிறுப்பு கொடுத்த இந்தப்படம் திரையில் அதே பரபரப்பை, விறுவிறுப்பை கொடுத்ததா? என்று கேள்வியை எழுப்பினால் ...
.இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.
லண்டனின் 1/11 அன்று நடந்த குண்டு வெடிப்பு நிகழ்விலிருந்து படம் ஆரம்பிக்கிறது. கண் தெரியாத விக்ரம் ஒருவனை கொலை செய்துவிட்டு வருகிறார். ஒரு பெண் அவருக்கு அடுத்தடுத்து யாரைக் கொலை செய்ய வேண்டும் என்று தகவல் சொல்லிக் கொண்டு வருகிறார். விக்ரம் யார்? அவர் எதற்காக இவர்களை கொல்கிறார்? இதன் பின்னணி என்ன என்பதுதான் கதை.
விக்ரமுக்கு கண் பார்வையற்ற கென்னியாகவும், ஐ.பி.எஸ் ரா ஆபீசர் கேரக்டர் என்று இரண்டு விதமான கேரக்டர் கெட்டப். கண் தெரியாதவராய் நடிக்கும் போது பாடிலேங்குவேஜில் கலக்குகிறார். பட் வாயால் டிக், டிக் செய்து கொண்டு நடிப்பது எல்லாம் ஐடியாவாக நன்றாக இருந்தாலும், அதை படம் பார்க்கும் மக்களுக்கு கன்வே செய்ய தவறிவிட்டார் என்றே தோன்றுகிறது. அனுஷ்காவுடனான ரொமான்ஸ் காட்சிகளில் முகத்தின் முதிர்ச்சி அயர்ச்சியாய் இருக்கிறது.
அனுஷ்கா, ம்ஹும். அழகாய் இருக்கிறார். பளிச் பளிச்சென்ற உடைகளில் மனதை கவர்கிறார். முதலிரவு காட்சியில் காலையில் தன்னைக் கலைத்துக் கொண்டு போகும் போது சஞ்சலப்படுத்துகிறார். மற்றபடி வேறேதும் தோன்றவில்லை. எமிஜாக்ஷன் ஒருஹைஃபை ஜூனியர் ஆர்டிஸ்ட் போல வருகிறார் விதவிதமான உடைகளில். ஒரு காட்சியில் தமிழ் கலாச்சாரம் பற்றி பேசுகிறார். சந்தானம் ஆங்காங்கே லேசாய் கிச்சு கிச்சு மூட்டுகிறார். சென்னையில் ஆட்டோ ஓட்டும் ஆட்டோக்காரன் போல படம் நெடுக இங்கிலீஷ் காரனை எல்லாம் கலாய்க்கிறார். ஆனால் சிரிப்புத்தான் வர மாட்டேனென்கிறது. நாசர் லண்டன் போலீஸில் வேலைப் பார்க்கும், இல்லை இல்லை எப்பப்பார் டாப்லெட் பிஸியில் ஆங்ரிபேர்டோ, அல்லது ஏதாவது கேமை விளையாடிக் கொண்டே துப்பறியும் இலங்கை தமிழர். படு மோசமான இலங்கைத் தமிழ் ஸ்லாங்கில் கதைக்கிறேன் என்று வதைக்கிறார்.
படத்தில் பாராட்டப்பட வேண்டிய ஒருவர் யார் என்றால் அது ஒளிப்பதிவாளர் நிரவ்ஷாதான். அருமையான ஒளிப்பதிவு. இரவு நேரக் காட்சிகளில் செய்யபட்டிருக்கும் லைட்டிங் அருமை. சண்டைக் காட்சிகளில் அக்காட்சியை அமைத்த ஸ்டண்ட் மாஸ்டர், சண்டையிட்ட நடிகர்களை விட திறமையாக சண்டையிட்டிருக்கிறார் எடிட்டர் ஆண்டனி. ஜி.வி.பிரகாஷின் 25வது படம். ஒரு பாடலைத் தவிர சொல்லிக் கொள்ளும் படியாய் இல்லை.சமீபத்தில் இவ்வளவு மொக்கையான பியானோ வாசிப்பை கேட்டதில்லை. க்ளைமாக்சில் மட்டும் கொஞ்சமே கொஞ்சம் ஆர்.ஆர் ஓகே.
எழுத்து இயக்கம் விஜய். வழக்கமாய் இவர் இதுவரை செய்த படங்கள் எல்லாமே ஏதோ ஒரு வகையில் தழுவலாய் இருந்தாலும் சரியான கதையுள்ள படத்தை உட்டாலககடி அடித்ததால் நிறைவான படமாய் அமைந்திருக்கிறது. ஆனால் இப்படத்தில் கண் தெரியாதவன் பழிவாங்குகிறான் என்பதை மட்டுமே சுவாரஸ்ய முடிச்சாய் வைத்துக் கொண்டு அதற்காக திரைக்கதை அமைத்ததில் பெரிதாய் சறுக்கியிருக்கிறார். அதற்காக பல படங்களிலிருந்து காட்சிகள் இன்ஸ்ப்ரேஷன் ஆகியிருக்கிறது. முதல் கொலைக்கான காட்சியில், டாக்ஸி ட்ரைவர், மாடியிலிருந்து விழும் பிணம் எல்லாம் கொலாட்ரல் படத்தில் பார்த்ததாய் ஞாபகம். இப்படி அங்கே இங்கே பார்த்த காட்சிகளின் தொகுப்பாக ஆரம்பிக்கும் படம், கொஞ்சம் ப்ளாஷ்பேக் போனால் கல்யாணம் ஆன பிறகு பார்த்தல், பழகுதல், நட்பாகுதல், காதல், பின்பு கல்யாணம் என்கிற கான்செப்ட்டை வைத்து இளமை ஊஞ்சலாடும் காதல் கதையாக்கலாம் என்ற எண்ணத்தில் வயதான விக்ரமும், என்னதான் ஜொள்ளு விட வைக்கும் ஹீரோயினாக அனுஷ்கா இருந்தாலும் இளமை ததும்பும் பெண்ணாய் மனது ஏற்றுக் கொள்ளாததால் இவர்களின் காதல், முதல் இரவு கொண்டாடாமல் பிரிந்து இருப்பது, இவர்களுகிடையே இன்ஸ்பயர் செய்து கொள்ள விழையும் காட்சிகள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்.
விக்ரம் ஏன் கொலை செய்கிறார் என்பதை நாளைக்கு பிறக்கப் போகும் குழந்தைக்கூட சொல்லிவிடும் அளவிற்கே யோசித்திருப்பது படு வீக். டாக்டராய் இருக்கும் அனுஷ்காவிற்கு தான் கல்யாணம் செய்யும் விக்ரம் என்ன வேலையில் இருக்கிறார் என்று கூட தெரியாமல் இருப்பதாய் காட்டியிருப்பது காட்சி சுவாரஸ்யத்திற்காக ஓகே என்றாலும் அதை வைத்து நான்கைந்து காட்சிகளில் ஜல்லியடித்திருப்பது பெரிய லாஜிக் ஓட்டை. அனுஷ்காவை இம்ப்ரஸ் செய்வதற்காக அவர் வாசித்த ட்யூனையே திரும்பத் திரும்ப வாசிப்பதும், அதை ஏதோ பீத்தோவன் வாசித்த ரேஞ்சுக்கு சர்ச்சில் ரசிப்பதெல்லாம் ஓவர். உச்சபட்ச லாஜிக் ஓட்டைகள் எல்லாம் படத்திலிருந்தாலும், வெடி குண்டு சம்பவம் நடந்து ஒரு வருடமாக கண் பார்வையில்லாமல் இருக்கிறார் விக்ரம். இதற்குள் காதால் கேட்பதற்கான ட்ரைனிங் எடுத்துக் கொள்வதும், முதல் பாதி முழுவதும் வாயால் டிக்...டிக் என்று ஓசையெழுப்பாமல் சண்டை போடுகிறவர். இரண்டாம் பாதியில் எல்லாம் சும்மாவாச்சும் டிக்..டிக் என்று சொல்லிக் கொண்டு கபடி ஆடுவது செம காமெடி. நண்பனாய் வரும் ஜகபதி பாபு வில்லனாய் மாறுவதும், மொத்த வில்லன் கும்பலும் ஒரு நாற்பது மாடி கட்டிடத்திற்குள் போக கீழே க்ரவுண்ட் ப்ளோரில் இருந்து இருபதாவது மாடியில் பேசுகிறவர்கள் பைனாக்குலர் கூட வைத்து பார்க்காமல் கண்டுபிடிப்பதை என்னவென்று சொல்வது?. படத்தில் நீளம் வேறு படு இம்சை. முதல் பாதியாகட்டும் இரண்டாவது பாதியாகட்டும் முடிவேனா என்ற நம்மை ஒரு கை பார்த்துவிடுகிறது. க்ளைமாக்ஸில் டெல்லி போலீஸ் ஆகட்டும், லண்டன் போலீஸாகட்டும் எல்லோரையும் முட்டாக்.. களாகவே காட்டியிருப்பதும், க்ளைமாக்சில் பெரும் போலீஸ் படையை வைத்துக் கொண்டு வில்லனை கொல்லும் அவகாசத்தை தருகிறார் என்பது போன்ற காட்சிகளை அபத்தம் என்று சொல்லாமல் என்ன சொல்வது?.
நல்ல விஷயமாய் ஏதுமில்லையா என்று கேட்டால் பாடல் தப்பான இடத்தில் வந்தாலும் கடற்கரை மணலில் டிசைன் டிசைனாக வரைந்து அதில் ஆடும் பாடல் காட்சி படமாக்கப்பட்டதும், விக்ரம், அனுஷ்கா கல்யாண காட்சிக்கு முன் நடக்கும் தம்பி ராமையா, எம்.எஸ்.பாஸ்கர், மிர்சி பாலாஜி வரும் லேசாய் புன்முறுவல் மூட்டும் காட்சியும், நல்ல ஒளிப்பதிவும், சண்டைக்காட்சிகளில் வரும் ஸ்லீக்கான எடிட்டிங்கும் என்று அதைப் பற்றியெல்லாம் பாராட்டலாம் என்றால் கண் முன்னே படு அபத்த லாஜிக் ஓட்டைக்காட்சிகளின் அணிவகுப்பு மட்டுமே தெரிவதால் பாராட்ட முடியவில்லை.
கேபிள் சங்கர்
Thandavam video songs,
thandavam video song,
thiruttuvcd com/videosongs,
thandavam tamil movie teaser song,
Thandavam new tamil movie songs HD video,
thandavam from thiruttu vcd,
thandawem video songs,
thandvam thirutu vcd full movi,
Thirudu video,
thiruttu vcd hd video songs,
download thandavam 2012 hd movie from thiruttuvcd com,
Title: Thandavam Movie 2012 Video Songs , thandavam Video Songs , thandavam Tamil movie
Submited by: tamildvd
Category: Tamil Video Songs
Added on: September 26th, 2012
Tags: thandavam Tamil movie, thandavam Video Songs, video songs, Watch Thandavam Tamil Movie Online
No comments:
Post a Comment