நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்
ஹீரோ ஹீரோயின் இருவருமே ஸ்கூல் மேட்ஸ் , காலேஜ் மேட்ஸ் , 3 படத்துல வர்ற மாதிரி ஆரம்பத்துல இருந்தே லவ். ஆனா பாருங்க 2 பேரும் வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கறதில்லை. எதையாவது உளறி அது ஈகோ மோதல் ஆகி ஊடல் பிரிவுன்னு அடிக்கடி ஆகிடுது. லவ்வர்ஸ்னா கிஸ் அடிக்க மட்டும்தான் வாயைத்திறக்கனும்னு அவங்களுக்குத்தெரியலை ( கிஸ் அடிக்க எதுக்கு வாயைத்திறக்கனும்? நாராயணா! நாராயண! )
மு க் அ ழகிரியும் , மு க ஸ்டாலினும் மாதிரி இருக்கும் அவங்க எப்படி பிரசன்னாவும் சினேகாவும் போல் சேர்றாங்க என்பது தான் திரைக்கதை .
படத்தின் முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான். சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது பாட்டு ஓடும்போது ஏதாவது ஒரு பொண்ணு மடில சாஞ்சுக்கலாம்னு நினைக்காத ஆண் இல்லை. கிளாசிக் மியூசிக். அதே போல் என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன். செம கலக்கலான பாட்டு , மற்ற பாட்டுக்களும் நல்லா இருக்கு . ஒரு ஆள் கூட தம் அடிக்கப்போகலை. ஆனா BGM ஸ்பெலிஸ்ட்டான இளையராஜா ஏன் இவ்வளவு அடக்கி வாசிச்சிருகாரோ?பல காட்சிகளில் போயஸ் தோட்டத்து மயான அமைதி நிலவுது. அவரே அப்படி இருக்கட்டும்னு விட்டுட்டாரா? கவுதம் ஏதாவது தகரர்று பண்ணி அதுக்குப்பழி வாங்கிட்டாரா? தெரில
ஜீவா. கோ படத்துல செம க்யூட்டா இருந்தவர் அதை விட யங்கா சில காட்சிகள்ல தெரிஞ்சாலும் மீசை இல்லாம அவரைப்பார்க்க என்னமோ மாதிரி இருக்கு. ஸ்கூல் பையனா வர்றப்ப அந்த கெட்டப் ஓக்கே . ஆனா காலேஜ் படிக்கறப்போ , ஜாப்க்குப்போறப்போ எல்லாம் அதே கெட்டப் ஏன்? ஏன்னா பல காட்சிகள்ல அவர் வசனம் பேசும்போது வில்லத்தனமாவே இருக்கு.ஈகோ மோதல்கள் கன கச்சிதமான நடிப்பு .
சந்தானம். ஒரு படத்தின் பல மைனஸ்களை தாங்கி நிற்கும் தூண். ஓக்கே ஓக்கே படம் மாதிரி படம் முழுக்க வராவிட்டாலும் பாதி அளவுக்கு வர்றார். அவர் பேசும் கவுண்ட்டர் பஞ்ச்க்கு டக் டக்னு ஆடியன்ஸ் அப்ளாஸ்.. அவருக்கும் ஒரு ஜோடி. காமெடி கலாட்டாக்கள்..
ஹீரோயின் சந்தனதேக அஜந்தா சமந்தா .பவுடர் போடறாரா? வெண்ணெய் யூஸ் பண்றாரா? என கேட்க வைக்கும் நைஸ் ஃபேஸ். முகத்துக்கு அதீதமான ஒப்பனை இல்லாமலேயே மிளிர்கிறார். இவரது டிரஸ்சிங்க் சென்ஸ் அபாரம். 6 காட்சிகளில் ஜீவாவுக்கு லிப் கிஸ் தர்றார். பல காட்சிகளில் ஜீவாவுக்கு இணையான நடிப்பு . ஆனா ஆவேசமா பேசும் காட்சிகளில் அவர் ஏன் ஒரு மாதிரி தடுமாறி நடக்கறார்னு தெர்யல . அப்படி பாடி லேங்குவேஜ் கோப காட்சிகளில் செட் ஆகலைன்னா ஒரே இடத்துல நின்னு டயலாக் பேசி எடுத்திருக்கலாம்.
ஸ்கூல் , காலேஜ் ஆஃபீஸ் என 3 வெவ்வேறு கட்டங்களில் திரையில் உலா வரும் பல ஃபிகர்கள் நேர்த்தியான தேர்வு .பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அள்ளுது .
இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்
1. படத்தின் ஓப்பனிங்க் சீனில் ஜீவா சமந்தாவைப்பார்த்து பாடும் நீதானே என் பொன் வசந்தம் , புது ராஜ வாழ்க்கை பாடலைப்பாட முகத்தில் வெட்கம் , தோழிகள் பார்ப்பதில் பெருமிதம் என அந்த ஆடிட்டோரியமே காதல் வெள்ளத்தில் தத்தளிக்கிறது .
2. அந்த குண்டுப்பெண் பள்ளிக்கூட அறையில் ஜீவாவைப்பார்க்க சமந்தாவுக்கு உதவும் காட்சிகள் கல கல. யதார்த்தம் . இளமை
3. சமந்தா நிலைக்கண்ணாடி முன் டைட் டி சர்ட் போட்டு நெஞ்சை நிமிர்த்தி அழகு பார்க்கும் காட்சி தியேட்டரில் அபார அப்ளாஸ் ( அவரோட நெஞ்சு அவர் நிமிர்த்தறாரு, இவ்ங்க ஏன் கிளாப்ஸ்? - அப்பாவி கோவிந்து)
4. சமந்தா ஒரு காட்சியில் சாம்பல் நிற காட்டன் சேலையும் , ரத்தச்சிவப்பு அமெரிக்கன் ஜார்ஜெட் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஜீவா கூட உலாத்தறாரே? ஆஹா ...
5. ஹீரோவோட அண்ணன் தான் விரும்புன பொண்ணு வீட்டுக்கு அப்பா, அம்மாவோட போய் பொண்ணு கேட்டு அவமானப்பட்டு திரும்பி வந்த பின் பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் காட்சியும் , ஜீவா குற்ற உணர்வில் பரிதவிக்கும் காட்சியும்
6. சந்தானம் , குண்டுப்பெண் லவ் போர்ஷன் ஜீவா - சமந்தா லவ் போர்ஷன் போர் அடிக்கும்போதெல்லாம் ரிலாக்ஸ்க்கு உதவுது. சந்தானம் பண்ணும் சேட்டைகள் கல கல
7. சமந்தா மொட்டை மாடியில் ஜீவாவிடம் வெடித்துக்கதறும் காட்சி , க்ளைமாக்ஸ் காட்சியில் என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பின்னணி இசை இசை ஞானி பெயர் சொல்லுது
8. ரிசப்ஷனில் தன் அண்ணியின் தங்கையையே மனைவியாக ஏற்றுக்கொள்ள முன் வரும் ஜீவாவை சமந்தா சோகத்துடன் கை குலுக்கி சம்பிராதய வாழ்த்து சொல்ல வரும்போது ஜீவா நாசூக்காக மறுப்பதும் அப்போது அடிபட்ட பார்வையுடன் சமந்தா அவரைப்பார்ப்பதும் நுணுக்கமான இயக்கம் .
9. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நெகடிவ் என பதட்டப்பட வைத்து கடைசி 15 நிமிடத்தில் ஹீரோ - ஹீரோயின் வாக்குவாதம் செய்யும் காட்சி
இயக்குநரிடம் சில கேள்விகள்
1. படத்தின் திரைக்கதையில் உள்ள மிகப்பெரிய மைனஸ் ஆண்களை பழிக்கும் விதமான கதை ஓட்டமே. அதாவது 99% உண்மைக்காதலர்கள் சில பிரச்சனைகளால் சேர முடியாமல் போய் விட்டால் ஆண் முதல்ல வேற பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். தப்பு பொண்ணு சைடில் என்றாலும், அவதான் வேண்டாம் என்று சொன்னாலும் அவளுக்கு மேரேஜ் ஆகி சில வருடங்கள் கழிச்சுத்தான் ஆண் மேரேஜ் பண்ணிக்குவான். நீங்க யாரை வேணா கேட்டுப்பாருங்க . ஆனா இதுல ஹீரோ காதலியுடனான சண்டையில், ஊடலில் தன் அண்ணியின் தங்கையை மணக்க சம்மதிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய் சொல்லப்படலை .
2. இசைஞானி இளையராஜா சாய்ந்து சாய்ந்து பாட்டை என்னமா உருகி இசை அமைச்சிருக்கார். ஆடியோ வெர்ஷன் மட்டும் கேட்கும்போது காதலியை தாய் ஸ்தானத்தில் வைத்து ஒரு சோகத்துக்கு அரவணைப்பும் ஆறுதலும் தேடும் ஒரு காதலனின் பாட்டாகவே அது வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனா பிக்சரைசெஷனில் அது இளமைக்குறும்பு , கில்மாக்கொண்ட்டாட்டமாகக்காட்டப்படுவதால் ரசிகன் தடுமாறுகிறான். பாட்டை லயித்து ரசிப்பதா? கிளு கிளுப்பை ரசிப்பதா? என . எப்படி இயக்குநரு இதுல ஸ்லிப் ஆனாரு
3. உன் அம்மா , அப்பாவைப்பற்றி என் கிட்டே ஏன் நீ சொல்லவே இல்லை? என ஹீரோயின் கடைசியில் குற்றம் சாட்டும்போது ஹீரோ மவுனமா இருக்கார் . “ ஏன் நீ கேட்கவே இல்லை?னு பதிலடி தர்லை . சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவித்துக்கொள்ளும் ஹீரோயின் ஹீரோ வேறு ஒரு பெண்ணுடன் மேரேஜ் , ரிசப்ஷன் என்றதும் ஓங்கி வெடிப்பார் என்று பார்த்தால் அழுது டிராக் மாறிட்டாரே?
4. இடைவேளை வரை சந்தானத்தின் காமெடியில் இசையில் ஓரளவு ஸ்பீடாகப்போகும் படம் பின் பாதியில் தட்டுத்தடுமாறுது . திருச்செந்தூரில் ஹீரோயின் ஸ்கூல் நடத்துவது , அவரை சமாதானம் பண்ண ஹீரோ வருவது அது சம்பந்தமான காட்சிகள் கொஞ்சம் இழுவை
5. விடிய விடிய ஹீரோ அனுப்பிய மெயிலை தூங்காமல் படிச்சுட்டு விடிஞ்சதும் எனக்கு இன்னும் கோபம் போகலை, சும்மா தான் படிச்சேன் என்பது மாதிரி அவர் வசனம் பேசுவது வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த டாக்டர் கலைஞர் மாநில அரசிடம் வர விடக்கூடாது என்று பல்டி அடிபப்து போல் படு கேவலமாக இருக்கு
6. ஹீரோ 8 வயசுல இருந்து ஸ்கூல் , காலேஜ் , ஆஃபீஸ் என பல கட்டத்துல ஹீரோயின் வீட்டுக்குப்[போயிருக்கார். ஆனா ஒரு முறை கூட ஹீரோயின் அப்பாவும் அவரும் சந்திக்கவே இல்லை என்பதும் ஹீரோயின் அப்பாவுக்கு இவர்கள் காதல் மேட்டரே தெரியாது என்பதும் காதில் பூச்சுற்று .
7. இவர்கள் காதல் ஈகோ யுத்தத்தில் ஹீரோவின் அண்ணியின் தங்கையை ரிசப்ஷன் எல்லாம் முடிச்சு , மேரேஜ்ல தாலி கட்ட கடைசி ஒரு மணி நேரம் முன்பு நைசா கழட்டி விடுவது வை கோவுக்கு நாஞ்சில் செஞ்ச துரோகம் போன்றது .
8. ஹீரோ , ஹீரோயின் ஈகோ மோதல் காட்சிகள் 4 இடங்களில் வருகிறது . எல்லாமே செம இழுவை. நறுக் சுருக் என முடிச்சிருக்கலாம் .
9. பல லட்சம் மதிப்புள்ள கார் எல்லாம் வெச்சிருக்கும் , கம் ஆஸ்திரேலியா அடிக்கடி போகும் வசதி உள்ள ஹீரோயின் ஹீரோவுக்கு கிஃப்டாக நோக்கியா 1100 மாடல் மாதிரி ஒரு டப்பா ஃபோனை தருவதும், அதே போல் ஹீரோயினும் மட்டரகமான ஃபோன் வைத்திருப்பதும் காதில் பூச்சுற்றல்
10. ஹீரோ அவ்வளவு ஈகோ பார்ப்பவர் ஹீரோயினிடம் ஒனத்தியாக ஓ சி செல் ஃபோன், ஓ சி சர்ட், என ஏகப்பட்ட ஓ சி களை வாங்கிக்கொள்வது
11. இளையராஜாவை வ்லுவந்தமாய்ப்பாராட்டும் ஒரு வரியாவது அவர் இசை அமைக்கும் படத்தில் வந்துடும் , இதுலயும் வருது .
மனம் கவர்ந்த வசனங்கள்
1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல?
ஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு
2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை
விட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல்
3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது
4. அவ கிட்டே என்னடா பேசறது?
ரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு
5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது
6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா?
நோ
அடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே?
ஆஸ்திரேலியா
7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத
8. அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே? நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும்
9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே?
10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா?
வாட்?
எல்லாரையும் சேர்த்துப்போட
மை திங்க்.....
வாட்? திங்க்?
என்ன? எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது? ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா )
11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு
12. நீ ஏதாவது சொல்லனுமா? நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்
அதான் இப்போ சொன்னேனே?
ஒண்ணும் சொல்லலையே?
கிஸ் அடிச்சேனே?
13. வாடா வா, சுடிதார்ங்க காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே?
14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன்
15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா?
16. என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா?
ம்ஹூம்
முடி வெட்டி இருக்கேன்
ஓஹோ சரி
சுத்தம்
17. நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்
இதானா? நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன்
அப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா?
18. உன் நல்லதுக்கும் எ ன் நல்லதுக்கும் , நம்ம . நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா?
ம்
என்னை விட்டுடு
19. நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் , என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை
20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு
21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு
இதே டயலாக்கை இன்னும் எத்த்னை படத்துல சொல்வே?
22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க
23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே?
சொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும்
24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க #nepv
25. எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல
20 நாள் ஆனாலும் சரி பரவாயில்லை
டேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்?
26. நீ என்னை வெறுத்துடக்கூடாது
அது முடியாது, ஐ ஹேட் யூ
27. குட்பை சொல்லிட்டு வந்துட்டேன்
குட்பை சொல்ல முடிஞ்சுதா?
28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே
ஆனந்த விகடன் எதிர்பார்ப்பு மார்க் - 43
குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க் - ஓக்கே
சி .பி கமெண்ட் - காதலர்கள் , யூத்ங்க, பிரிந்து வாழும் தம்பதிகள் பார்க்கலாம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே கூடாத படம் .ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன் . சி செண்ட்டர்ல சுமாராத்தான் போகும், பி செண்ட்டர்ல பொங்கல் வரையும் , ஏ செண்ட்டர்ல 50 நாள் தாண்டியும் ஓடும்