இந்த விமர்சனம் திரு.சங்கர்நாராயணன் அவர்களின்பதிவில் இருந்து சுடப்பட்டது :P
காதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது. அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.
ஹன்சிகா இளைத்தாலும் நன்றாகவே இருக்கிறார். நடிப்பதற்கு என்று பெரிதாய் ஏதுமில்லை. சித்தார்த் அப்பாவி இளைஞன் கேரக்டருக்கு சரியாய் பொருந்துகிறார். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் இவரிடம். கணேஷ் வெங்கட்ராமனை ஆணழகன். அவனை அடைவதற்காக ஆபீஸில் உள்ள அத்துனை பெண்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல் காட்டுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அவரைப் பார்க்கும் போது படத்தில் ஆர்.ஜே பாலாஜி “செல்வராகவன் படத்தின் செகண்ட் ஹீரோ போல இருக்கான்” என்றும், சித்தார்த் “ ஜிம்முக்கு போய்ட்டு வந்த ஜெமினி கணேசன்” என்றும் ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள். பாஸ்கி, தேவிப்ரியா, மனோபாலா, வித்யா, மற்றும் ரெண்டு மூன்று சூப்பர் பிகர்கள் என்று ஏகப்பட்ட நடிகர்கள். மனோபாலாவும், சந்தானமும் ப்ராத்தல் ஹவுசில் அடிக்கும் லூட்டி செம காமெடி. வித்யாராம் = சந்தானம் காதல் முறியும் காட்சி செம.