Friday, December 16, 2011

Dirty Picture Movie Tamil Review : Cable Sankar


Please Note : This Review is not by Myself . it's by 

Senior Blogger : Cable Sankar . Click Here to Visit His Site
Dirty Picture

Vidya-Balan-in-The-Dirty-Pictureசினிமாவிற்கு வெளியே இருக்கும் நண்பர்கள் பலபேரை சந்திக்கும் போது அவர்களின் பேச்சு, ஆண்களாய் இருந்தாலும் சரி, பெண்களாய் இருந்தாலும் சரி, சுற்றிச் சுற்றி நடிகைகள், அவர்களின் அந்தரங்கத்தைப் பற்றி பேச்சு வந்துவிடும். பெரும்பாலும் ஆண்களின் கேள்விகள் எல்லாம் அவளுக்கு எவ்வளவு, இவளுக்கு எவ்வளவு, அவளுக்கும், இந்த நடிகருக்கும் மேட்டராமே? என்றெல்லாம் மாற்றி, மாற்றி கேள்வி கேட்பார்கள். பெண்களின் கேள்விகளில் பட்டவர்தனமாய் இருக்காதே தவிர இதே தொனியில் இருக்கும். எல்லோருக்கும் ஒரே நினைப்பு நடிகை என்பவள் யார் கூப்பிட்டாலும் பணத்துக்காகவும், படத்துக்காகவும் படுக்க தயாராக இருப்பவள் என்பதுதான். ஒரு கதாநாயகிக்கே இந்த நிலை என்றால் கவர்ச்சி ஆட்டம் போடும் ஒரு நடிகையின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும் என்பதற்கு இப்படம் ஒரு சான்று.

சமீபத்தில் நான் கலந்து கொண்ட ஒரு கூட்டத்தில் பாலுமகேந்திரா பேசும் போது, தனக்கு ஆக்‌ஷன் படம் செய்யத் தெரியாது என்று ஒரு தயாரிப்பாளர்  தன்னிடமும் அந்த தயாரிப்பாளரிடமும் மாற்றி, மாற்றி வந்து போய்க் கொண்டிருந்த ஒரு நடிகை சொன்னதாகவும், அதற்காகவே அவளை முன்னணியில் வைத்து நீங்கள் கேட்டவை என்கிற படத்தை எடுத்தேன் என்று கூறினார். இதில் அவருக்கும் அந்த நடிகைக்கும் இருந்த உறவு பற்றியதை விட, அந்த நடிகைக்கு இருந்த இன்னொரு உறவு தான் முக்கியமானது. ஒரே நேரத்தில் இருவரிடமும் அந்த நடிகை வைத்திருந்த உறவை பற்றி சொன்னதுதான். இந்த டர்ட்டி பிக்சர் அந்த நடிகையின் கதையை சொல்லும் படம்.
dt5சில்கின் வாழ்கையை படமாக்கியிருக்கிறார்கள் என்று சொல்லப்பட்டாலும் இந்தக் கதை இந்திய சினிமா மட்டுமல்ல, உலகில் உள்ள எல்லா சினிமாக்களிலும் உள்ள கேஸ்டிங் கவுச் ப்ரசனைதான். ஏதோ ஆண்களுக்கு இம்மாதிரியான ப்ரச்சனைகள் இல்லை என்பது போல் நினைக்க வேண்டாம் அவர்களுக்கு வேறு மாதிரியான அனுபவங்கள், செலவுகள். சரி.. கதைக்கு வருவோம். நடிகை ஆவதற்கு ஆசைப்பட்டு செலக்‌ஷனுக்கு போகும் வித்யா பாலனை அந்த இயக்குனர் “நீ ஒரு சப்பை பிகரு” என்று சொல்லி ஐந்து ரூபாய் கொடுத்து ஏதாவது சாப்பிடச் சொல்கிறான். நொந்து போய் திரைப்படத்துக்கு செல்பவளை ஒரு வயதானவன் ஐம்பது ரூபாய்க்கு கூப்பிடுகிறான். அடுத்த நாள் ஷூட்டிங் வேடிக்கை பார்க்க போகிறவளுக்கு அடித்தது லக்கி ப்ரைஸ். திடீரென நடிகையாய் ஆக்கபட, சிறந்த இயக்குனரான இம்ராம் ஆஸ்மிக்கு அவளை பிடிக்கவில்லை. தன்னை கொடுத்து எல்லாரையும் சரிக்கட்டி பெரும் நடிகையாகிறாள். பலருக்கு ஆசை நாயகியாகிறாள். கடைசியில் திரையுலகிலும், போட்டி வர, சொந்தப் படம் எடுத்து நஷ்டமடைகிறாள். அவள் நம்பியவர்கள் எல்லாம் கைவிட, நிஜமாகவே டர்ட்டி பிக்சரில் நடிக்கப் போய் அதிலிருந்து தப்பித்து மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள். இந்தக் கதை சில்க்கின் கதை மட்டுமல்ல பெரும்பாலான நடிகைகளின் கதை இது.
dt1சில்கின் வாழ்க்கையில் எல்லோருக்கும் தெரிந்த சில சம்பவங்களை மட்டும் வைத்துக் கொண்டு இவர்களாக ஒரு கதையை உருவாக்கி அதில் ஜெயித்திருக்கிறார்கள். சினிமாவின் வேலை என்ன தெரியுமா? “எண்டர்டெயிண்மெண்ட், எண்டர்டெயிண்மெண்ட், எண்டர்டெயிண்மெண்ட்” நான் ஒரு எண்டர்டெயினர் என்ற வசனம் தான் படத்தின் ஆணிவேர். நடிகைகளுக்கு இருக்கும் பிரச்சனை, நடிகர்களோடு அட்ஜெஸ்ட்மெண்ட் செய்ய வேண்டிய கட்டாயம். பின்னர் வெற்றியால் கிடைக்கும் புகழும்,பணமும். அநத பணம் கொடுக்கும் திமிர், அப்பணத்தை இழந்து விட்டு அதை தேடியலையும் கொடுமை. பிரிந்த காதல், தனிமை என்று ஒரு நடிகையின் வாழ்வில் நடக்கும் அத்துனை விஷயங்களையும் புட்டு புட்டு வைத்திருக்கிறார் இயக்குனர் மிலிந் லூத்ரேயா.

விதயா பாலன் கலக்கியிருக்கிறார். ஆரம்பக் காட்சிகளில் பக்கத்து அறையில் விபச்சார பெண்ணின் உடலுறவுக்கு “ம்..ஆ..” என்று குரல் கொடுக்கும் காட்சியிலிருந்து, நடிகையாக வாய்ப்பு கிடைத்து சாட்டையடிக்கிடையே அவர் காட்டும் எக்ஸ்பிரஷன்கள் அருமை. சூப்பர் ஸ்டார் சூர்யா காந்த், தன்னை கரெக்ட் செய்ய முறைப்பு காட்டும் இடத்தில் வளைந்து கொடுக்கும் காட்சியும், வீட்டில் அந்த நடிகருடன் உறவில் இருக்கும் சமயம், நடிகரின் மனைவி வந்துவிட, பாத்ரூமில் ஒளிந்து கொண்டு சாவி ஓட்டை வழியாய் அந்த ஹீரோ தன் மனைவியுடன் உறவு கொள்வதை பார்த்து நொந்து போய் அழும் காட்சி. மிக சுலபமாய் டபுள் மீனிங் என்றில்லாமல் நேரடியாய் முகத்தில் அடித்தார் போன்ற டயலாக்குகளை அநாயசமாய் பேசி அதிர்ச்சியை கிளப்புகிறார். இப்படத்திற்காக பனிரெண்டு கிலே எடை அதிகமாக்கி நடித்திருக்கிறார். தன்னை ஒரு செக்ஸ் சைரனாய் ஒலிபெருக்கி வைத்து அறிவிக்காத குறையாய் உடைகளில் ஆகட்டும் நடிப்பிலாகட்டும் அதை வெளிப்படுத்தும் இடங்களில் வாவ்.. வாழ்த்துக்கள் விதயா பாலன். ஆரம்ப காட்சிகளில் அவரின் திறந்த மார்பகங்கள் கிளர்ச்சியூட்டக்கூடியதாய் இருந்தாலும் அடுத்தடுத்த காட்சிகளில் அது நம் கண்ணுக்கு தெரியாமல் சில்க்காய் தெரிவதிலேயே இவர் வெற்றி பெற்றுவிடுகிறார்.
dt4சூர்ய காந்தாய் நஷ்ருதீன் ஷா. கொஞ்சம் அசந்தால் தமிழ்படம் போல பரோடியாய் ஆகிவிட வாய்ப்பிருக்கிற கேரக்டர். மனுஷன் அனுபவித்து செய்திருக்கிறார். பெயரில் ரஜினியை இமிடேட் செய்திருந்தாலும், பெரிதாய் ரஜினியை போல் காட்டவில்லை. ஆனால் அந்த ஸ்டைலை இயக்குனராக வரும் இம்ரான் ஆஸ்மியிடம் இருக்கிறது. வழக்கம் போல எல்லா ஏக்தா கபூர் படங்களில் வரும் துஷார் கபூர். சின்ன காமியோ ரோல். பெரிதாய் சொல்ல ஏதுமில்லை. செல்வகணேஷாக வரும் அந்த நடிகர் மனதில் நிற்கிறார். சின்னச் சின்ன கேரக்டர்களும் நன்றாக வடிவமைக்கப்பட்டு சிறப்பாக செய்திருக்கிறார்கள். டெக்னிகலாய் சொல்லப் போனால் ஒளிப்பதிவு, போன்ற விஷயங்களைப் பற்றி ஆஹா ஓஹோ என்று சொல்ல முடியாவிட்டாலும் ஓகே. ஆனால் அதே நேரத்தில் என்பதுகளில் சில்க்கின் ஹிட் பாடலாய் நாக்க மூக்கவை போடுவதும், மற்ற பாடல்களை எல்லாம் என்பதுகளின் ஹிந்தி பாடல்களை போல காட்டியிருப்பதும், கிட்டத்தட்ட விபசாரியைப் போல வித்யாபாலனின் கேரக்டரை வடிவமைத்திருப்பதும் நெருடலாய் இருக்கிறது. ஹிந்தி படத்தை விட தமிழில் பார்பதற்கு உற்சாகமாக இருப்பதற்கு காரணம் வசனங்கள். சும்மா நச்சு நச்சென எழுதியிருக்கிறார்கள். க்ளைமாக்ஸ் காட்சியில் இம்ரான் சில்கிடமிருந்து போன் வந்திருப்பதாய் ஓடிப் போய் பேசிவிட்டு வர, சூர்யகாந்த அவரிடம் எங்கே போகிறாய் என்றதும், அவர் சில்க் தான் போனில் என கூறியதும் ‘நிக்கிற பஸ்ஸுல ஏறுறதுக்கு எதுக்கு ஓடிப் போகணும்? ‘ என்று கேட்பார். இப்படி படம் நெடுக, பஞ்ச, வசனங்களுக்கும், டபுள் , மற்றும் ஸ்ட்ரெயிட் மீனிங் வசனங்களுக்கு பஞ்சமில்லை.

எல்லாருமே இப்படித்தான் அட்ஜெஸ்ட்மெண்ட் செய்து கொண்டு நடிக்கிறார்களா? என்று கேட்டால் இல்லை என்றும் சொல்வேன். என்ன அவர்கள் என்னதான் நன்றாக நடித்திருந்தாலும், இரண்டொரு படங்களில் காணாமல் போய்விடுவதும் உண்டு. ஹிந்தி வர்ஷன் தியேட்டர்கள் ஃபுல்லாகிவிட்டதால் மெலோடியில் சனிக்கிழமை இரவு காட்சிக்கு போயிருந்தோம். என் சமீப கால அனுபவத்தில் பால்கனி புல்லாகி கீழே வரை டிக்கெட் போயிருந்தது. விரல் விட்டு எண்ணக்கூடிய பெண்களேஎ இருந்தார்கள். புகழும், பணமும் கொடுக்கும் போதை அற்புதமான ஒரு விஷயம். அதை உணர்ந்து அனுபவித்தால் தான் உடலுக்கு நல்லது. இல்லை அது நம்மை அழித்துவிடும் என்பதை மீண்டும் ஒரு நடிகையின் வாழ்க்கையை விஸ்தாரமாய் திரையில் காட்டி ஜெயித்திருக்கிறார்கள்.
Dirty Picture - 30/50
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

1 comment:

  1. திரைக்கதை, editing, இசை பற்றி ஒன்றும் சொல்லவில்லை?

    ReplyDelete