Sunday, February 3, 2013

Neethaane en ponvasantham - Movie Review


நீ தானே என் பொன் வசந்தம் - சினிமா விமர்சனம்

http://www.tamilstar.com/photo-galleries/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters/images/tamil-cinema-neethane-en-ponvasantham-new-posters01.jpg 

ஹீரோ ஹீரோயின் இருவருமே  ஸ்கூல் மேட்ஸ் , காலேஜ் மேட்ஸ் , 3 படத்துல வர்ற மாதிரி ஆரம்பத்துல இருந்தே லவ். ஆனா பாருங்க 2 பேரும் வாயை வெச்சுக்கிட்டு சும்மாவே இருக்கறதில்லை. எதையாவது உளறி அது ஈகோ மோதல் ஆகி ஊடல் பிரிவுன்னு அடிக்கடி ஆகிடுது. லவ்வர்ஸ்னா கிஸ் அடிக்க மட்டும்தான் வாயைத்திறக்கனும்னு அவங்களுக்குத்தெரியலை ( கிஸ் அடிக்க எதுக்கு வாயைத்திறக்கனும்? நாராயணா! நாராயண! )


 மு க் அ ழகிரியும் , மு க ஸ்டாலினும் மாதிரி இருக்கும் அவங்க எப்படி பிரசன்னாவும் சினேகாவும் போல் சேர்றாங்க என்பது தான் திரைக்கதை .


படத்தின் முதல் ஹீரோ சந்தேகமே இல்லாம இளையராஜா தான். சாய்ந்து சாய்ந்து நீ பார்க்கும்போது பாட்டு ஓடும்போது ஏதாவது ஒரு பொண்ணு மடில சாஞ்சுக்கலாம்னு நினைக்காத ஆண் இல்லை. கிளாசிக் மியூசிக். அதே போல் என்னோடு வா வா என்று சொல்ல மாட்டேன் உன்னை விட்டு வேறு எங்கும் போக மாட்டேன். செம கலக்கலான பாட்டு , மற்ற பாட்டுக்களும் நல்லா இருக்கு . ஒரு ஆள் கூட தம் அடிக்கப்போகலை. ஆனா BGM ஸ்பெலிஸ்ட்டான இளையராஜா  ஏன் இவ்வளவு அடக்கி வாசிச்சிருகாரோ?பல காட்சிகளில் போயஸ் தோட்டத்து மயான அமைதி நிலவுது. அவரே அப்படி இருக்கட்டும்னு விட்டுட்டாரா? கவுதம் ஏதாவது  தகரர்று பண்ணி அதுக்குப்பழி வாங்கிட்டாரா?  தெரிலஜீவா. கோ படத்துல செம க்யூட்டா இருந்தவர் அதை விட யங்கா சில காட்சிகள்ல தெரிஞ்சாலும் மீசை இல்லாம அவரைப்பார்க்க என்னமோ மாதிரி இருக்கு. ஸ்கூல் பையனா வர்றப்ப அந்த கெட்டப் ஓக்கே . ஆனா காலேஜ் படிக்கறப்போ , ஜாப்க்குப்போறப்போ எல்லாம் அதே கெட்டப் ஏன்? ஏன்னா பல காட்சிகள்ல அவர் வசனம் பேசும்போது வில்லத்தனமாவே இருக்கு.ஈகோ மோதல்கள் கன கச்சிதமான நடிப்பு . 


 சந்தானம். ஒரு படத்தின் பல மைனஸ்களை  தாங்கி நிற்கும் தூண். ஓக்கே ஓக்கே படம் மாதிரி படம் முழுக்க வராவிட்டாலும் பாதி அளவுக்கு வர்றார். அவர் பேசும் கவுண்ட்டர் பஞ்ச்க்கு டக் டக்னு ஆடியன்ஸ் அப்ளாஸ்.. அவருக்கும் ஒரு ஜோடி. காமெடி கலாட்டாக்கள்.. ஹீரோயின் சந்தனதேக அஜந்தா  சமந்தா .பவுடர் போடறாரா? வெண்ணெய் யூஸ் பண்றாரா? என கேட்க வைக்கும்  நைஸ் ஃபேஸ். முகத்துக்கு அதீதமான ஒப்பனை இல்லாமலேயே மிளிர்கிறார். இவரது டிரஸ்சிங்க் சென்ஸ் அபாரம். 6 காட்சிகளில்  ஜீவாவுக்கு லிப் கிஸ் தர்றார். பல காட்சிகளில் ஜீவாவுக்கு இணையான  நடிப்பு . ஆனா ஆவேசமா பேசும் காட்சிகளில் அவர் ஏன் ஒரு மாதிரி தடுமாறி நடக்கறார்னு தெர்யல . அப்படி பாடி லேங்குவேஜ் கோப காட்சிகளில் செட் ஆகலைன்னா ஒரே இடத்துல நின்னு டயலாக் பேசி எடுத்திருக்கலாம். 


ஸ்கூல் , காலேஜ் ஆஃபீஸ் என 3 வெவ்வேறு கட்டங்களில் திரையில் உலா வரும் பல ஃபிகர்கள் நேர்த்தியான தேர்வு .பாடல் காட்சிகளில் ஒளிப்பதிவு அள்ளுது .http://moviegalleri.net/wp-content/gallery/neethane-en-ponvasantham-movie-stills/neethane_en_ponvasantham_movie_stills_jeeva_samantha_97aaaee.jpg


 இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. படத்தின் ஓப்பனிங்க் சீனில் ஜீவா சமந்தாவைப்பார்த்து பாடும் நீதானே என் பொன் வசந்தம் , புது ராஜ வாழ்க்கை பாடலைப்பாட முகத்தில்  வெட்கம் , தோழிகள் பார்ப்பதில் பெருமிதம் என அந்த ஆடிட்டோரியமே காதல் வெள்ளத்தில் தத்தளிக்கிறது . 2. அந்த குண்டுப்பெண் பள்ளிக்கூட அறையில்  ஜீவாவைப்பார்க்க சமந்தாவுக்கு உதவும் காட்சிகள் கல கல. யதார்த்தம் .  இளமை 


3. சமந்தா நிலைக்கண்ணாடி முன் டைட் டி சர்ட் போட்டு நெஞ்சை நிமிர்த்தி அழகு பார்க்கும் காட்சி தியேட்டரில் அபார அப்ளாஸ் ( அவரோட நெஞ்சு அவர் நிமிர்த்தறாரு, இவ்ங்க ஏன் கிளாப்ஸ்?  - அப்பாவி கோவிந்து) 


4. சமந்தா ஒரு காட்சியில் சாம்பல் நிற காட்டன் சேலையும் , ரத்தச்சிவப்பு அமெரிக்கன் ஜார்ஜெட் ஜாக்கெட்டும் போட்டுக்கிட்டு ஜீவா கூட உலாத்தறாரே? ஆஹா ... 


5. ஹீரோவோட அண்ணன் தான் விரும்புன பொண்ணு வீட்டுக்கு அப்பா, அம்மாவோட போய் பொண்ணு கேட்டு அவமானப்பட்டு திரும்பி வந்த பின்  பரஸ்பரம் ஒருவருக்கொருவர் ஆறுதல் கூறிக்கொள்ளும் காட்சியும் , ஜீவா குற்ற உணர்வில் பரிதவிக்கும் காட்சியும் 


6. சந்தானம் , குண்டுப்பெண்  லவ் போர்ஷன் ஜீவா - சமந்தா லவ் போர்ஷன் போர் அடிக்கும்போதெல்லாம் ரிலாக்ஸ்க்கு உதவுது. சந்தானம் பண்ணும் சேட்டைகள் கல கல 


7. சமந்தா மொட்டை மாடியில் ஜீவாவிடம் வெடித்துக்கதறும் காட்சி , க்ளைமாக்ஸ் காட்சியில்  என குறிப்பிட்ட சில இடங்களில் மட்டும் பின்னணி இசை இசை ஞானி பெயர் சொல்லுது 


8. ரிசப்ஷனில் தன் அண்ணியின் தங்கையையே  மனைவியாக ஏற்றுக்கொள்ள முன் வரும் ஜீவாவை சமந்தா சோகத்துடன் கை குலுக்கி சம்பிராதய வாழ்த்து சொல்ல வரும்போது ஜீவா நாசூக்காக மறுப்பதும் அப்போது அடிபட்ட பார்வையுடன் சமந்தா அவரைப்பார்ப்பதும் நுணுக்கமான இயக்கம் .


9. க்ளைமாக்ஸ் நெருங்கும்போது விண்ணைத்தாண்டி வருவாயா மாதிரி நெகடிவ்  என பதட்டப்பட வைத்து  கடைசி 15 நிமிடத்தில் ஹீரோ - ஹீரோயின் வாக்குவாதம் செய்யும் காட்சி 


http://www.tamilstar.com/photo-galleries/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers/images/tamil-movies-neethane-en-ponvasantham-movie-wallpapers09.jpgஇயக்குநரிடம் சில கேள்விகள்1. படத்தின் திரைக்கதையில் உள்ள மிகப்பெரிய மைனஸ் ஆண்களை  பழிக்கும் விதமான கதை ஓட்டமே. அதாவது 99%  உண்மைக்காதலர்கள் சில பிரச்சனைகளால் சேர முடியாமல் போய் விட்டால் ஆண் முதல்ல வேற பெண்ணைக்கல்யாணம் பண்ணிக்கவே மாட்டான். தப்பு பொண்ணு சைடில் என்றாலும், அவதான் வேண்டாம் என்று சொன்னாலும் அவளுக்கு மேரேஜ் ஆகி சில வருடங்கள் கழிச்சுத்தான் ஆண் மேரேஜ் பண்ணிக்குவான். நீங்க யாரை வேணா கேட்டுப்பாருங்க . ஆனா இதுல ஹீரோ காதலியுடனான சண்டையில், ஊடலில் தன் அண்ணியின் தங்கையை மணக்க சம்மதிக்கிறான். அதை ஏற்றுக்கொள்ளும் விதமாய் சொல்லப்படலை .2. இசைஞானி இளையராஜா சாய்ந்து சாய்ந்து பாட்டை என்னமா உருகி இசை அமைச்சிருக்கார். ஆடியோ வெர்ஷன் மட்டும் கேட்கும்போது  காதலியை தாய் ஸ்தானத்தில் வைத்து  ஒரு சோகத்துக்கு அரவணைப்பும் ஆறுதலும் தேடும் ஒரு காதலனின் பாட்டாகவே அது வடிவமைக்கப்பட்டிருக்கு. ஆனா பிக்சரைசெஷனில் அது இளமைக்குறும்பு , கில்மாக்கொண்ட்டாட்டமாகக்காட்டப்படுவதால் ரசிகன் தடுமாறுகிறான். பாட்டை லயித்து ரசிப்பதா? கிளு கிளுப்பை ரசிப்பதா? என . எப்படி இயக்குநரு இதுல ஸ்லிப் ஆனாரு3. உன் அம்மா , அப்பாவைப்பற்றி என் கிட்டே ஏன் நீ சொல்லவே இல்லை? என ஹீரோயின் கடைசியில் குற்றம் சாட்டும்போது ஹீரோ மவுனமா இருக்கார் . “ ஏன் நீ கேட்கவே இல்லை?னு பதிலடி தர்லை . சின்ன சின்ன விஷயத்துக்கு எல்லாம் கோவித்துக்கொள்ளும்  ஹீரோயின் ஹீரோ வேறு ஒரு பெண்ணுடன் மேரேஜ் , ரிசப்ஷன் என்றதும் ஓங்கி வெடிப்பார் என்று பார்த்தால் அழுது டிராக் மாறிட்டாரே? 4. இடைவேளை வரை சந்தானத்தின் காமெடியில் இசையில்   ஓரளவு ஸ்பீடாகப்போகும் படம் பின் பாதியில் தட்டுத்தடுமாறுது . திருச்செந்தூரில் ஹீரோயின் ஸ்கூல் நடத்துவது , அவரை சமாதானம் பண்ண ஹீரோ வருவது அது சம்பந்தமான காட்சிகள் கொஞ்சம் இழுவை 


5. விடிய விடிய ஹீரோ அனுப்பிய மெயிலை தூங்காமல் படிச்சுட்டு விடிஞ்சதும் எனக்கு இன்னும் கோபம் போகலை, சும்மா தான் படிச்சேன் என்பது மாதிரி அவர் வசனம் பேசுவது வால்மார்ட் விவகாரத்தில் மத்திய அரசுக்கு ஆதரவு தெரிவித்த டாக்டர் கலைஞர்  மாநில அரசிடம்  வர விடக்கூடாது என்று பல்டி அடிபப்து போல் படு கேவலமாக இருக்கு 6. ஹீரோ 8 வயசுல இருந்து ஸ்கூல் , காலேஜ் , ஆஃபீஸ் என பல கட்டத்துல ஹீரோயின் வீட்டுக்குப்[போயிருக்கார். ஆனா ஒரு முறை கூட ஹீரோயின் அப்பாவும் அவரும் சந்திக்கவே இல்லை என்பதும் ஹீரோயின் அப்பாவுக்கு இவர்கள் காதல் மேட்டரே தெரியாது என்பதும் காதில் பூச்சுற்று .


7. இவர்கள் காதல் ஈகோ யுத்தத்தில் ஹீரோவின் அண்ணியின் தங்கையை ரிசப்ஷன் எல்லாம் முடிச்சு , மேரேஜ்ல தாலி கட்ட கடைசி ஒரு மணி நேரம் முன்பு நைசா கழட்டி விடுவது  வை கோவுக்கு நாஞ்சில் செஞ்ச துரோகம் போன்றது .8. ஹீரோ , ஹீரோயின் ஈகோ மோதல் காட்சிகள் 4 இடங்களில் வருகிறது . எல்லாமே செம இழுவை. நறுக் சுருக் என முடிச்சிருக்கலாம் . 9. பல லட்சம் மதிப்புள்ள கார் எல்லாம் வெச்சிருக்கும் , கம் ஆஸ்திரேலியா அடிக்கடி போகும் வசதி உள்ள ஹீரோயின் ஹீரோவுக்கு கிஃப்டாக நோக்கியா 1100 மாடல் மாதிரி ஒரு டப்பா ஃபோனை தருவதும், அதே போல் ஹீரோயினும் மட்டரகமான ஃபோன் வைத்திருப்பதும் காதில் பூச்சுற்றல் 10. ஹீரோ அவ்வளவு ஈகோ பார்ப்பவர் ஹீரோயினிடம் ஒனத்தியாக ஓ சி செல் ஃபோன், ஓ சி சர்ட், என ஏகப்பட்ட ஓ சி களை வாங்கிக்கொள்வது 


11. இளையராஜாவை வ்லுவந்தமாய்ப்பாராட்டும் ஒரு வரியாவது அவர் இசை அமைக்கும் படத்தில் வந்துடும் , இதுலயும் வருது . 


http://behindwoods.com/tamil-movie-news-1/sep-12-01/images/neethane-en-ponvasantham-jiiva-04-09-12.jpg


மனம் கவர்ந்த வசனங்கள்


1. லவ் பண்றப்ப எல்லா சாங்க்ஸும் நமக்காகவே எழுதுன மாதிரியே இருக்குது இல்ல? 


 ஆமாமா . இன்க்ளூடிங்க் போடா போடா புண்ணாக்கு போடாதே தப்புக்கணக்கு
2. டேய் , நிஜமா அவ செம ஃபிகர்டா. இப்படி ஒரு ஃபிகரை நான் பார்த்ததே இல்லை 

 விட்ரா மச்சான், எனக்கு எல்லா பொண்னுங்களூமே செம ஃபிகராத்தான் தெரியுது. ஏன்னா நான் படிச்சது பாய்ஸ் ஹைஸ்கூல் 3. லாரிக்குக்கீழே விழுந்தவனைக்கூட காப்பாத்திடலாம், ஆனா லவ்வுல விழுந்தவனைக்காப்பாத்தவே முடியாது
4. அவ கிட்டே என்னடா பேசறது?

 ரேஷன்ல பாமாயில் ஊத்தறாங்க , வா 2 பேரும் போய் வாங்கிட்டு வரலாம்னு கூப்பிடு5. சில பசங்க கிட்டே ஜாக்கிரதையா இருங்கன்னு நம்ம பேரண்ட்ஸ் சொல்வாங்களே, அவன் தான் அது 

6. ஏற்காடு போறேன், நீ அங்கே போய் இருக்கியா? 


 நோ 

 அடடா, வாட் எ பிளேஸ்... சரி நீ எங்கே போகப்போறே? 

 ஆஸ்திரேலியா 7. எனக்காக சந்தோஷமா இருக்கறது மாதிரி அட்லீஸ்ட் நடிக்காத 
8.  அவன் அடிக்கற மொக்கை ஜோக்குக்கெல்லாம் ஏன் சிரிக்கறே? நான் சொல்றதுக்கு மட்டும் தான் நீ சிரிக்கனும் 


9. மாப்பி , கத்திரிப்பூ கலர்ல கேவலமா  ஒரு சர்ட் வெச்சிருப்பியே அதை போட்டுட்டுப்போகலையே? 10. சந்தானம் - ஏண்டி, உங்களை எல்லாம் சமாளிக்க நான் ஒருத்தன் போதாதா?


வாட்?

 எல்லாரையும் சேர்த்துப்போட 


 மை திங்க்..... 

 வாட்? திங்க்?

 என்ன? எல்லாமே டபுள் மீனிங்க்ல வருது?  ( இது கவுண்டமணியின் காமெடி உல்டா ) 
11. ப்ளீஸ், நீ வடையை பிராக்டீஸ் பண்ணு, இதுல தலையிடாத, நீ தின்னத்தான் லாயக்கு 12. நீ ஏதாவது சொல்லனுமா? நான் ஐ லவ் யூ சொல்லிட்டேன்

 அதான் இப்போ  சொன்னேனே?

 ஒண்ணும் சொல்லலையே? கிஸ் அடிச்சேனே? 13. வாடா வா, சுடிதார்ங்க  காய விட்ட பின்னாலதான் உங்களுக்கெல்லாம் பேண்ட் சர்ட் கண்ணுக்குத்தெரியுமே? 14. கரண்ட் பில்லுல அதுக்கு வெச்சிருந்த பணத்துல தண்ணி அடிச்சுட்டேன் 15. அண்ணனுக்கு பெண் பார்க்க நான் வர்லை, அந்தப்பொண்ணு திடு திப்னு என்னை பிடிச்சிருக்குன்னு சொல்லிட்டா? 


http://galleries.celebs.movies.2.pluzmedia.in/albums/pictures/uploads/Kollywood/2012/Sep/04/Neethane_En_Ponvasantham_Latest_Stills/Neethane_En_Ponvasantham_Latest_Stills96132685227bc3e15c84d4362430fc0d.jpg


16.  என் கிட்டே ஏதாவது மாற்றம் தெரியுதா? 


 ம்ஹூம்

 முடி வெட்டி இருக்கேன்

 ஓஹோ சரி 

 சுத்தம் 17.  நான் எம் பி ஏ படிக்கலாம்னு இருக்கேன்

 இதானா? நான் கூட ஏதோ சீரியஸ் மேட்டர்னு நினைச்சேன் அப்போ நான் படிக்கறது சீரியஸ் மேட்டர் இல்லையா? 18. உன் நல்லதுக்கும்  எ ன் நல்லதுக்கும் , நம்ம .  நல்லதுக்கும் ஒண்னே ஒண்னு சொல்றேன் , கேட்கறியா?

 ம் 

 என்னை விட்டுடு 


19.  நான் வேணா உனக்கு சிட்டுக்குருவி லேகியம் வாங்கித்தர்றேன் ,  என்னை தயவு செஞ்சு தம்பின்னு கூப்பிடாதே, ஏன்னா ஹாஸ்பிடல் நர்சைக்கூட சிஸ்டர்னு கூப்பிட்டதில்லை 20. அப்பாவை வருத்தப்பட வெச்சுட்டேன், அதான் வருத்தமா இருக்கு 21. இங்கே என்ன தோணுதோ அதை பேசு 

 இதே டயலாக்கை இன்னும் எத்த்னை படத்துல சொல்வே? 22. இந்தப்பொம்பளைங்க இருக்காளுங்களே 2 மணி நேரப்படம் பார்க்க 3 மணி நேரம் மேக்கப் போடுவாளுங்க23. ஏண்டா , நீ மட்டும் இறங்கி வந்துட்டே, நீயும் ஈகோல அவளை செர்த்தான் போடினு சொல்லி இருக்கலாமே? 


 சொல்லி இருக்கலாம், அப்புறம் காலம் பூரா கைல பிடிச்சுக்கிடு உக்காந்திருக்கனும் 


24. கரண்ட் கட் கூட முன் கூட்டியே சொல்லிட்டு கட் பண்றாங்க, ஆனா இந்த கன்னிப்பொண்ணுங்க சொல்லாம கொள்ளாம காதலை கட் பண்ணிருவாளுங்க #nepv 25.  எப்படியும் அவ சமாதானம் ஆக 10 நாள் ஆகும் போல 


 20 நாள் ஆனாலும் சரி  பரவாயில்லை

 டேய் நாம என்ன டூரா வந்திருக்கோம்?26. நீ என்னை வெறுத்துடக்கூடாது

 அது முடியாது, ஐ ஹேட் யூ 27.  குட்பை சொல்லிட்டு வந்துட்டேன் 


 குட்பை சொல்ல முடிஞ்சுதா?28. ஈசியா அழ முடியுதேன்னு அழுதுட்டே இருக்காதே  


http://3.bp.blogspot.com/-DsUf7paUoXw/UB7kL86tOrI/AAAAAAAAGUE/cUhwdhY5Ho4/s1600/Samantha+Hot+Navel+Stills+With+No+Watermark+(3).jpg


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் - 43 


 குமுதம் எதிர்பார்ப்பு ரேங்க்  - ஓக்கே  சி .பி கமெண்ட் - காதலர்கள் , யூத்ங்க, பிரிந்து வாழும் தம்பதிகள் பார்க்கலாம். இளையராஜா ரசிகர்கள் மிஸ் பண்ணவே  கூடாத படம் .ஈரோடு வி எஸ் பி ல படம் பார்த்தேன் . சி செண்ட்டர்ல சுமாராத்தான் போகும், பி செண்ட்டர்ல பொங்கல் வரையும் , ஏ செண்ட்டர்ல 50 நாள் தாண்டியும் ஓடும் 

http://tamilhotactress.files.wordpress.com/2010/12/samantha-hot-stills61.jpg

கும்கி - சினிமா விமர்சனம்

டேவிட் - சினிமா விமர்சனம் - David Movie Review 


ஈரோடு சண்டிகா தியேட்டர்ல சாயங்காலம் 6 மணிக்குத்தான் படம் போடுவாங்க . நேத்து என்னடான்னா  6.30 மணிக்குத்தான் டிக்கெட்டே குடுத்தாங்க , நியூஸ் ரீல் ட்ரெய்லர் எல்லாம் முடிச்சு பின் 7 மணிக்கு படம் போட்டாங்க, ஜீ வா நடிச்ச கோ படத்துல இருந்து ஆல் டைம் ஃபேவரைட் பாட்டான “ என்னமோ ஏதோ “ பாட்டு போட்டாங்க , சரி போனாப்போகுதுன்னு விட்டுட்டேன், அப்புறம் விக்ரம் நடிச்ச  தெய்வத்திருமகள் பட பாட்டு போட்டாங்க , செம கடுப்பாகிட்டேன். ஆபரேட்டர் மாத்தி ஓட்டறாரா? இல்லை  நம்மை ஓட்டறாரா? விசாரிக்க கிளம்புனா கேட்டை வழி மறிச்சு 4 பேரு “ சார் சார் , கோபப்பாடாதீங்க , படம் ரொம்ப சின்னப்படம் , அது தெரியாம இருக்க இப்படி ஹி ஹி ன்னாங்க .


அதாவது இது ஒரு டப்பிங்க் படம். ஹிந்தி ஒரிஜினல் ல 3 கதை. 3க்கும் சம்பந்தம்

கடல் - சினிமா விமர்சனம் - Adrasaka


கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் .


கடல் - சினிமா விமர்சனம்

ஒரு நல்ல பாதிரியார் , ஒரு மோசமான தாதா ( தாதான்னாலே மோசம் தானே?ஆனா தளபதி, நாயகன் தாதா நல்லவங்க ஆச்சே?) இவங்க 2 பேரும்  சந்தர்ப்ப வசத்தால சவால் விட்டுக்கறாங்க. 2 பேர்ல யார் ஜெயிச்சாங்க என்பதே கதை. இந்தக்கதைல கிளைக்கதையா  பாதிரியாரின் வளர்ப்பு மகனும், தாதாவின்  நிஜ மகளும் லவ்வறாங்க .அவங்க தான் ஹீரோவும் , ஹீரொயினும் . ஹீரோயின் கொஞ்சம் மெண்ட்டல் . அவங்க ஏன் மென்ட்டல்  ஆனாங்க என்பதற்கு கதைல ஒரு ட்விஸ்ட் இருக்கு. அதாவது அதை ட்விஸ்ட்னு டைரக்டர் நினைச்சுட்டாரு போல . முடியல ..... 


அதாகப்பட்டது மணி ரத்னம் சும்மா இருக்காம மாலை மலர் பேப்பர் நிறைய படிச்சிருக்காரு . அதுல ஒரு நியூஸ் . பாதிரியார் சர்ச்ல ஒரு பெண்ணை மேட்டர் முடிச்சுட்டார். அது அவர் மேல போடப்பட்ட  வீண் பழி . இந்த KNOT டை வெச்சு  ஒரு திரைக்கதை தேத்தலாம்னு பார்த்திருக்கார். இந்தப்படம் வாங்கப்போகும் அடி அவர் தேறவே 2 வருஷம் ஆகும் . படத்தோட முதல் ஹீரோ ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனன் தான் . கலக்கிட்டாரு மனுஷன் . கடல் அலைகளை , வானம் , சூரியன் , நிலா , பீச் , துளசி க்ளியவேஜ் -னு அவர் ராஜாங்கம் தான் ஓரளவாவது தியேட்டர்ல உக்கார வைக்குது 


 அடுத்து இசைப்புயல் ஏ ஆர் ஆர் . நெஞ்சுக்குள்ளே, என்னை நீ எங்கே கூட்டிப்போறே? , ஏ லே கீச்சான்  , மகுடி  என 4 பாட்டு ஹிட்.  படமாக்கிய விதம் அழகு 


படத்தை டாமினேட் பண்ணுவது ஆக்‌ஷன் கிங்க் அர்ஜூன், அவர் தான் தாதா . ஆயுத  பூஜை பட கெட்டப்ல அசத்திட்டார். அவரோட கேரக்டரைசேஷன் இயக்குநர் ஹரி பட காப்பி . 
 அர்விந்த்சாமி  நல்ல பாதிரியாரா வர்றார். சின்ன சின்ன டயலாக் குடுத்து அவரையும், நம்மையும் காப்பாத்திட்டார்  இயக்குநர் . 
 ஹீரோவா கார்த்திக்கின் வாரிசு கவுதம் கார்த்திக்  சைடுல இருந்து பார்த்தா அவர் முகச்சாயல் தெரியுது, நடிக்க முயற்சி பண்ணி இருக்கார். ஒரு முதல் படம் ஹீரோ எந்த அளவு   பண்ணுனா போதுமோ அந்த அளவு பண்ணி இருக்கார் .  ஹீரோயின் துளசி. அவர் நல்ல கட்டையோ இல்லையோ அவர் குரல் செம கட்டை. முடியல . தமிழர்கள் குரல் வளத்தைப்பார்க்க மாட்டாங்க சாரி கண்டுக்க மாட்டாங்க என்பது உண்மைதான் , அதுக்காக இப்படியா? ராதா முகச்சாயல் கார்த்திகாவை விட துளசிக்கு ஜாஸ்தி .புருவம் அக்காவை விட தங்கச்சிக்கு சின்னது . ( நாட்டுக்கு ரொம்ப முக்கியம் ). அவர் சிரிக்கும்போது ஒரு மாதிரி உதட்டை சுளிக்கிறார். உதட்டை மட்டும் கவனிச்சவங்க கடுப்பாகிடுவாங்க .என்னதான் 15 வயசுல அபார வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் பாப்பா சினி ஃபீல்டுல வளர்றது கஷ்டம் தான் . இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்1. கதைக்கு சம்பந்தமே இல்லாம மீனவன் , கடல் , ஏ லே கீச்சான் பாட்டு எல்லாம்  ரெடி பண்ணி பில்டப் கொடுத்து நீர்ப்பறவையில் சொல்லாத , விடு பட்ட ஏதோ ஒரு மீனவர் பிரச்சனையை , ஈழத்தமிழர் பிரச்சனையை இவர் சொல்லப்போறார்னு எதிர்பார்ப்பை ஏற்படுத்துனது . 2.  போஸ்டர் டிசைனை நல்ல படம் மாதிரியே உருவாக்குனது
3. விஸ்வரூபம்  வராத சைக்கிள் கேப்ல படம் ரிலீஸ் பண்ணி 7 நாள் ஓட்ட வெச்சது ( அதாவது 7 நாள் ஓடிடும் ) 4. தான் உண்டு தன் பிஸ்னெஸ் உண்டுனு தேமேன்னு கிடந்த அர்விந்த் சாமியை நல்ல கேரக்டர்னு ஏமாத்தி ரீ எண்ட்ரி கொடுத்து நடிக்க வெச்சது 5. படத்தை பிரமோட் பண்றதுக்காக தேவையே இல்லாம லிப் லாக் கிஸ் சீனை   வலுக்கட்டாயமா புகுத்துனது .6 கிறிஸ்டியன்ஸ் ஏதாவது பிரச்சனை பண்ணட்டும் , உலக ஃபேமஸ் ஆகிடலாம்னு வேணும்னே அவங்களை வம்புக்கு இழுத்தது . ( ஆனா அவங்க செம டேலண்ட், யாரும் கண்டுக்கலை , ஏன்னா பிரச்சனை பண்ணுனா பர பரப்பா ஓடும் , இப்போ வந்த சுவடே தெரியாமல் போகும் ) 
இயக்குநரிடம் சில கேள்விகள்


1. சார், அலைபாயுதே , மவுன ராகம், கீதாஞ்சலி ( இதயத்தை திருடாதே)  நிஜமாவே உங்க கதை தானா?  ஏன்னா நீண்ட இடைவெளிக்குப்பின் நீங்க எடுக்கப்போகும் காதல் கதை பட்டாசைக்கிளப்பப்போகுதுன்னு நினைச்சா தியேட்டருக்கு வந்த ஆடியன்சை பாதிலயே கிளப்பி விடுதே? 2. அர்விந்த் சாமி பாதிரியார் , படிச்சவர் . பண்பானவர் , ஆனா அவர் செருப்பு போட்டுட்டு 2 சீன்ல ஷூ போட்டுட்டு 4 சீன்ல தேவாலயத்துக்குள் போய்ட்டு வந்துட்டு இருக்கார், படிப்பறிவே இல்லாத பொடியன்க வெறும் கால்ல போறாங்க3.  நீங்க 30 வருஷம் சினி ஃபீல்டுல இருந்தீங்க என்பதற்காக 30 வருடங்களுக்கு முன் வைக்க வேண்டிய ட்விஸ்ட்டை எல்லாம் இப்போ வெச்சா எப்டி? சார். 

ஒரு பொண்ணு நல்லவனை கை காட்டி இவன் என்னை ரேப்பிட்டான் ஐ மீன் கெடுத்துட்டான்  அப்டினு பொய்ப்புகார் குடுத்தா அந்தக்காலத்துல அய்யோ பாவம்னு ஜனங்க பார்ப்பாங்க . இப்போ பெஞ்ச் ரசிகன் கூட ஏம்பா அதான் ஏதோ டி என் ஏ டெஸ்ட் இருக்காமில்ல அதை பார்த்தா தெரிஞ்சுடுது அப்டினு சொல்றான் .
 திரைக்கதை அமைச்ச ஜாம்பவான்கள் 2  பேரு , அதுக்கு அசிஸ்டெண்ட்டா 18 பேரு ஆல் டிகிரி ஹோல்டர்ஸ் யாரும் கவனிக்கலை? இந்த லாஜிக் ஓட்டையை உங்க பேசும் படம் சுஹாசினி மேடம் கூட சொல்லலையோ?  ( ஒரு வேளை அவரோட  வசன வாய்ப்பை நீங்க  ரைட்டருக்கு குடுத்துட்டதால நல்லா வேணும் , எப்டியோ போகட்டும்னு விட்டுடாரோ?4. கடல் ஓரம் வாழும் ஒரு பெண் ணின் முகம் மினுமினுப்பாக ஆயில் போட்ட மாதிரி  இருக்கே, அது எபப்டி?5. அப்பாவை ஊரே அடிச்சுப்போட்டுட்டு இருக்குன்னு ஒருத்தன் வந்து சொன்னா அப்படியே  பதறி ஹீரோ ஓட வேண்டாமா? அவர் என்னமோ ரஞ்சிதா கிட்டே விசாரனை பண்ற மாதிரி யார் அடிச்சா? எதுக்கு? ஏன்? அப்டினு 10 நிமிஷம் டயலாக் பேசிட்டு இருக்காரு?  ( டயலாக் எழுத டோட்டலா படத்துக்கு இத்தனைன்னு இனி பேசிடுங்க , ஐ திங்க்  ஒரு பக்கத்துக்கு ரூ 10,000 அப்டினு காண்ட்ராக்ட் போட்டுட்டீங்க போல , அண்ணன்  புகுந்து விளையாடிட்டார் ) உங்க படத்துலயே அதிக வசனம் கொண்ட படம் இதுதான் 


6. ஒரு யூத் பையன் சைக்கிளைத்தூக்குவது ரொம்ப சாதாரண விஷயம் . இதுல ஹீரோ சைக்கிளைத்தூக்குவதை ஓவர் பில்டப் கொடுத்து க்ளோசப்ல பை செப்ஸ் எல்லாம் நரம்பு முறுக்கேறுவதைக்காட்டுவது ரொம்ப ஓவர். அவர் என்ன நமீதாவையா தூக்கறார்?
7.  நண்பன் படத்துல ஷங்கர் சார்  பிரசவக்காட்சி ஒண்ணை க்ளைமாக்ஸ்ல வெச்சார்னா கதைக்கு அது தேவையா இருந்தது , அப்டி வெச்சா படம் ஹிட் ஆகிடும்னு யாரோ சொன்னாங்கன்னு கேட்டு கதைக்கு சம்பந்தமே இல்லாம பிரசவ காட்சி . அதுக்கு கேமரா ஆங்கிள் உஷ் அப்பா முடியல . மலையாளப்படம் மாதிரி .. 
8. தேவாலயத்தில்  சின்னப்பையன் உச்சா போகும் காட்சி ,  வசனத்தில் மிக மலிவான  கெட்ட வார்த்தைகள் இதெல்லாம் உங்க தரத்தை குறைக்குது. ப்ளீஸ் டோண்ட் ஃபர்க்ட் யூ ஆர் ஏ செண்ட்டர் டைரக்டர் , இப்படி சி செண்ட்டர் மாதிரி இறங்கி  அடிக்கக்கூடாது . ( கேட்டா அந்த கேரக்டர் அப்படித்தான் பேசும்னு ஒரு நொணை நாட்டியம் ( சால்ஜாப்பு) பேசுவீங்க )
9. உங்களுக்கு காமெடி அவ்வளவா வராதுன்னு எல்லாருக்கும் தெரியும் , அதுக்காக இப்படியா? ரொம்ப ட்ரை ( DRY)


10. மன வளர்ச்சி குறைந்த துளசியை  மருத்துவப்பணி பார்க்க விடுவது எப்படி? சும்மா காயத்துக்கு மருந்து போடுவது என்றால் கூட பரவாயில்லை,பிரசவம் பார்க்கறார், விட்டா  பை பாஸ் ஆபரேஷன் பண்ணிட்வார் போல


11. அர்விந்தசாமி பாதிரியார் கேரக்டர்,  அவர் எப்படி டபால்னு அர்ஜூன் உடம்புல பாய்ஞ்ச புல்லட்டை ஆபரேஷன் பண்ணி எடுக்கறார்? உங்க படத்துல வர்ற கேரக்டர்கள் எல்லாருமே டாக்டர்களா?


12. ட்ரெய்லர்ல , போஸ்டர்ல , ஸ்டில்ஸ்ல துளசிக்கு  லிப் லாக் கிஸ் சீன் வெச்சீங்க , ஆனா படத்துல அது இல்லையே? சென்சார்லயே விட்ட சீனை எதுக்கு தூக்குனீங்க? இது சீட்டிங்க் இல்லையா? ஒரு வேளை  10 நாட்கள் கழிச்சு இணைக்கப்பட்ட லிப் கிஸ் காட்சியுடன்னு ஓட்ட வைக்க தந்திரமா?


மனம் கவர்ந்த வசனங்கள்


1. நம்மூருக்கு புது சாமியார் வந்துருகார்ல.. எம்ஜிஆரு போலவே இருக்கீரே .
2. சந்தோசமா இருக்க கூடாதுன்னு எந்த பைபிள்லயும் சொல்லல, ஏன் உம்முன்னு இருக்கீங்க?
3.  எனக்கு பைபிளும் தெரியும், பசியும் தெரியும்
 எனக்கு  பைபிள் மட்டும் தான் தெரியும் 
4.பாவத்துல நீ தலை குப்புற விழனும், அதை நான் பார்க்கனும் 
5. பாவ மன்னிப்புக்கு 10 ரூபா, ஜெபத்துக்கு 15 ரூபா , ஆனா லேடீஸ் க்கு எல்லாம் ஃபிரீ ஹி ஹி 
6. திஸ் ஈஸ் சாமியார், சாமியார் ஈஸ் குட் 
 யோவ் அது பாதிரியார்யா 
7. எல்லாருக்கும் அம்மா சொல்லித்தான் அப்பாவைத்தெரியும்.
8.  அஞ்சு ரூபா குடுத்து வாரியா? ( வர்றியா? )னு கூப்பிட்டவங்க மத்தில என் கூட வாழ்றியா? வா! கட்டிக்கறேன்ன்னு சொல்ற ஆளை இப்போத்த்தான் பார்க்கறேன்  


9. மனசுக்குள்ளே சூரியன் உதிப்பது போல இருக்கு  ( நீ என்ன டி எம் கேவா?/ )10. பாதிரியார் யாரோ ஒரு பொண்ணுகூட ஓடுவது மாதிரி தெரியுதே?


 இன்னும் 2 கிளாஸ் சரக்கு அடிச்சுப்பாரும் . 2 பேரோட ஓடிப்போற மாதிரி தெரியும் 11. சுடறதா இருந்தா எப்பவோ  சுட்டிருப்பே , இப்படி பேசிட்டு இருக்க மாட்டே 12. நிம்மதியா இருக்கறதை விட உஷாரா  இருக்கறதை நான் விரும்பறேன்


13.  அவ ஏன் அப்படி மன வளர்ச்சி கம்மியா இருக்கான்னா ஆழ்மனசு செய்யும் தந்திரம் , அவ  வளர்றதை விரும்பலை , எதையோ பார்த்து பயந்திருக்கலாம் 


14,.  இப்போதான் உன்னைப்பத்தி நினைச்சேன் 


 என்ன?னு ? தெரில , மறந்துட்டேன்15.  நீ என்னை கை விட்டுட்டியா? 


 நோ , கை நழுவிடுச்சு 


16. நன்மைக்கு இந்த உலகத்துல இடம் இல்லை , எனக்கே தெரியாம என் வாழ்க்கைல ஒரு நன்மை நடந்தா அதை அழிச்சுடுவேன் . அது என் மகளா இருந்தாலும் சரி17. மனுஷனுக்கு பாவம் செய்யச்சொல்லித்தரத்தேவை இல்லை , நடக்கற மாதிரி அது தானா வந்துடும் 


18.  நான் நிறைய பாவம் பண்ணி இருக்கேன். பாவம்னா என்னன்னு தெரியுமா உனக்கு? 


 ம்ஹூம் 


-------

 சரி சரி , இனி பண்ணாதே, எல்லாம் சரியாப்போச்சு 


( ஆடியன்ஸ் - பாவம் எது தெரியுமா? இந்தப்படத்துக்கு நாங்க வந்தது )


எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் = 40 (  ஆக்சுவலா 37 தான் தரனும் , ஆனா விகடன்ல எப்பவும் ஷங்கர், கமல், மணி 3 பேருக்கும் ஷாஃப்ட் கார்னர் உண்டு  

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்கிங்க் - சுமார் 

 ரேட்டிங்க் -  2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்  சி பி கமெண்ட் -  மணிரத்னம் சாரின் தீவுர ரசிகர்கள் இடைவேளை வரை பார்த்துட்டு ஓடிவிடவும் , ஏ ஆர் ஆர் ரசிகர்கள் எஃப் எம்மில் பாட்டுக்கேட்டுக்கொள்ளவும் ,பொது மக்கள்  டி வி ல எப்போ போடுவாங்கன்னு வெயிட் பண்ணவும். தமிழ்ப்புத்தாண்டுக்கு போட்டுடுவாங்க  .மணிரத்னத்தின் சாதனை அவரோட அட்டர் ஃபிளாப்பான ராவணனை கடல் தாண்டிடுச்சு