Friday, January 13, 2012

நண்பன் திரைப்படம் விமர்சனம் :


சத்தியமா சொல்லுறன் இந்த பதிவு நம்ம கேபிள் சங்கர் சார் க்கு உரித்தானது..

ஆனாலும் கோப்பி + பேஸ்ட்  எல்லாருக்கும் பொதுவானதுnanban-stills
ஷங்கர், விஜய், ஜீவா, ஸ்ரீகாந்த், சத்யராஜ், ஹாரிஸ் என்று தமிழ் சினிமாவில் எப்போதாவது ஒரு முறைதான் இம்மாதிரியான காம்பினேஷன் ஏற்படும். அம்மாதிரி ஏற்படும்போது அதற்கான எதிர்பார்ப்பும் எகிறிவிடும். பல சமயங்களில் எதிர்பார்ப்புக்கு மாற்றாக அப்படங்கள் அமைந்துவிடுவது உண்டு. அப்படிப்பட்ட ஹைஃபை ஏற்றிய இந்த நண்பன் அதை தக்கவைத்தானா? என்பதை பார்போம்.
nanban-movie-latest-photos-02 காணாமல் போன தன் நண்பனை தேடி அலையும் மற்ற இரு நண்பர்கள் தங்களின் கடந்த காலத்து காலேஜ் வாழ்க்கையை நினைத்து பார்க்க என்று ஆரம்பிக்கிறது கதை. இஞ்ஜினியரிங் காலேஜில் படிக்கும் மூன்று இளைஞர்களின் கதை. சத்யராஜ் முதல்வராய் இருந்து  நடத்தும் டெல்லியின் முக்கியமான இஞ்ஜினியரிங் காலேஜில், பொருளாதார முறையில் வெவ்வேறு நிலையில் இருக்கும் மூன்று இளைஞர்களான, விஜய், ஸ்ரீகாந்த், ஜீவா என்கிற மூன்று பேரை சுற்றி நடக்கும் கதை. விஜய் ஒரு பணக்கார வீட்டு இளைஞன், ஸ்ரீகாந்த் ஒரு மிடில்க்ளாஸ், ஜீவா வறுமைக் கோட்டுக்கு மிக அருகில் இருப்பவன். இவர்களுக்குள் நடந்த அந்த சில வருட காலேஜ் வாழ்க்கையையும் அவர்களின் வெற்றி தோல்விகளையும் பற்றியக் கதை தான் இப்படம்.
nanban-movie-latest-photos-05 ஆரம்பத்தில் ஒவ்வொரு கேரக்டரையும் அறிமுகப்படுத்தும் காட்சியிலேயே இம்ப்ரெஸ் செய்ய ஆரம்பித்துவிடுகிறார்கள். ஸ்ரீகாந்த் கேரக்டரை அறிமுகப்படுத்தும் காட்சியில் ஒருபழைய ஏர்கண்டிஷனரை காட்டி தங்களுடய பொருளாதாரத்தை பற்றி மகனிடம் சொல்லும் அப்பா, இன்னொரு பக்கம் ஜீவாவின்  வழக்கமான பரரலைஸ்ட் அப்பா, கல்யாணத்துக்கு காத்திருக்கும் அக்கா, தனி ஒருத்தியாய் குடும்பத்தைக் காப்பாற்றும் அம்மா என்பதை வழக்கமாய் சொலலாமல் படு காமெடியாய் வெளிப்படுத்தியக் காட்சி, சத்யராஜ் தங்களுடய மாணவர்களுக்கு டெரராய் ஒரு ஸ்பீச் கொடுக்கும் காட்சியில் அங்கேயிருக்கும், படிப்பில் ஆர்வமிருக்கும் மில்லிமீட்டர் சிறுவன், அவர் பேசுவதை வரி மாறாமல் மைமிங் செய்வதாகட்டும், பல லட்ச ரூபாய் செலவு செய்து கண்டுபிடித்த அஸ்ட்ரோனாட் பென்னை பற்றி சொல்லும் போது அதை மிக அலட்சியமாய் ஏன் அவர்கள் பென்சில் உபயோகிக்க கூடாது? என்று கேட்டு மூக்குடைபடுவதாகட்டும். ஒவ்வொரு காட்சியும் நச்சென்று உட்காருகிறது.

ஏற்கனவே இந்தியில் பார்த்த படம் தான் என்றாலும் மீண்டும் இவர்கள் காம்பினேஷனில் பார்க்க ஆர்வம் குறையவேயில்லை. அதற்கு முக்கிய காரணம் காஸ்டிங். கொஞ்சமே கொஞ்சம் ஸ்ரீகாந்ந்தும் இலியானாவும்தான் இடிக்கிறார்களே தவிர மற்றவர்களெல்லாம் பிக்சர் பர்பெக்ட். பொமன் இரானியை பார்த்தவர்களுக்கு சத்யராஜின் நடிப்பு கொஞ்சம் அதிகப்படியாய் தோன்றினாலும் அசத்தலான நடிப்பு. ஒரு சில காட்சிகளைத் தவிர. முக்கியமாய் விஜய் க்ளாஸ் நடத்தும் காட்சியில் அவர் புத்தகத்தை புரட்டும்படியான ரியாக்‌ஷனில் இயல்பை விட நாடகத்தனம் தான் அதிகமானதாய் இருந்தது. மற்றபடி  மிகச் சிலருக்கே அவர்கள் வயதுக்கேற்ற கேரக்டர்கள் கிடைக்கும் போது மேலும் மிளிர்வாரள். சத்யராஜ் ஜொலிக்கிறார்.
nanban-movie-latest-photos-09மாதவன் கேரக்டரில் ஸ்ரீகாந்த் படத்திற்காக உடல் இளைத்து மிக இளைஞன் ஆகியிருக்கிறார். உழைபிற்கேற்ற பலன் இவருக்கு கிடைப்பது நிச்சயம். தனியாய் இவருக்காக காட்சிகள் ஏதுமில்லாவிட்டாலும் அப்பாவிடம் தன் விருப்பத்தை சொல்லும் காட்சியில் மனதில் நிற்கிறார். அதே போல விஜய்யுடன் சேர்ந்தால் இனி தன் வாழ்க்கை அவ்வளவுதான் என்று முடிவு செய்து, சத்யனின் அறையில் போய் செட்டிலாகிவிடும் ஜீவாவை அவர்களுடன் சேர்க்க செய்யும் காட்சிகள், ஜீவாவின் அப்பாவிற்கு உடல் நிலை சரியில்லாத போது ஸ்கூட்டியில் வைத்து ஆஸ்பத்திரியில் அட்மிட் செய்திருக்க, ஜீவா, ஸ்ரீகாந்த், விஜய் சந்திக்கும் காட்சி செம நெகிழ்ச்சி என்றால், நட்பு பெரிதா? இல்லை தன் வாழ்க்கை பெரிதா என்ற யோசனையில் வேறு வழி தெரியாமல் மாடியிலிருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்யுமிடத்திலும், கேம்பஸ் இண்டர்வியூ அட்டெண்ட் செய்யுமிடத்திலும் நெகிழ வைக்கிறார்.

கதாநாயகி என்கிற அந்தஸ்து இலியானாவுக்கு கொடுக்கப்பட்டிருப்பதாலும், தனியாய் ரெண்டு பாடல்கள் இருப்பதாலும் அவரைப் பற்றி சொல்ல வேண்டிய கடமையாகிறது. சைஸ் ஜீரோவிலிருக்கும் இவரை பார்த்தால் வத்திப் போன கொத்தவரங்காய் போல் இருக்கிறார். இவரை விட அவரது அக்கா சிவா மனசுல சக்தி கதாநாயகி அனுயா க்யூட்டாகத் தெரிகிறார். மற்றபடி இலியானாவின் நடிப்பை விட அவரது இடுப்பு ஒரு பாடல் முழுவதும் நடித்திருக்கிறது. வாழ்த்துக்கள் இலியானா இடுப்புக்கு.
 nb4இவரையெல்லாம் விட மிக முக்கியமான கேரக்டர் சத்யனுக்கு. அவர் எனக்கு நண்பர். நல்ல சினிமா ஆர்வமுள்ளவர். தயாரிப்பாளர் மாதம்பட்டி சிவகுமாரின் மகன். அவர் கதாநாயகனாக நடித்து இரண்டு படங்கள் வெளிவந்த போதெல்லாம் சொல்வேன். கதாநாயக வேடம் தவிர்த்து பாண்டியராஜன் போல காமெடி கம் ஹீரோ கேரக்டர் செய்யுங்கள் நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று. பின்பு அவர் முழுக்க தன்னை காமெடியனாக மாற்றிக் கொண்டு வெற்றியடைந்த போது கூட என்னிடம் நான் சொன்னதை நினைவு கூர்ந்தார். இயக்குனர் ஷங்கர் இந்தப் படத்தின் ஆணிவேரான முக்கிய கேரக்டரில் அவரை நடிக்க வைத்து அவரை ஒரு நல்ல நடிகர் என்பதையும் நிருபிக்க வாய்ப்பளித்திருக்கிறார். அதை சத்யன் முழுவதும் பயன்படுத்தியிருக்கிறார். வாழ்த்துக்கள் சத்யன் இனி உங்களுக்கு நிஜமாகவே ஏறுமுகம்தான்.
 
3 இடியட்ஸில் அமீரை பார்க்கும் போது நாற்பது வயதுக்காரரான அவரது நடிப்பில் இருபது வயது ஆளை தெரிய வைத்த முனைப்பு தெரியும். ஆனால் விஜய்யின் நடிப்பில் இருக்கும் இளமையும், துள்ளலும் அவர் மிகவும் சிரமப்படாமலேயே நச்சென பொருந்திவிடுகிறார். மிக கேஷுவலான நடிப்பு. சட்டென கண்களில் தெரியும் குறும்பு, இரண்டு கைகளையும் பாக்கெட்டில் விட்டுக் கொண்டு பார்க்கும் பார்வை, நண்பர்களுக்காக ஓடி ஓடி உதவும் கருணை, வசந்த்தின் ப்ராஜெக்டை செயல்படுத்த முனையும் அவரின் கண்களில் தெரியும் ஆர்வமென்று தன்னால் முடிந்த அளவிற்கான உழைப்பை சரியான படத்திற்கு செலவிட்டிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். அவரின் படங்களில் நிச்சயம் சொல்லிக் கொள்கிற வகையான படம் என்பதில் ஐயமேயில்லை.  விஜய் வழக்கமாய் பார்க்க அழகாய் இருக்கும் படமெல்லாம் பெரியதாய் ஓடியதில்லை. சச்சின், அழகிய தமிழ் மகன் ஆகிய படங்களை உதாரணமாய் சொல்லலாம். ஆனால் அதை உடைத்திருக்கும் படம் நண்பன்.
nb2ஹாரிஸின் இசையில் ஏற்கனவே முத்துகுமாரின் ஆல் இஸ் வெல், மற்றும் மதன் கார்க்கியின் அஸ்கு லஸ்கா பாடல்கள் ஹிட் லிஸ்டில் இருப்பதால் மீண்டும் அதை பற்றி சொல்ல வேண்டியதில்லை. மீண்டும் பின்னணியிசையில் வீழ்ந்திருக்கிறார். பல இடங்களில் இந்த மாதிரியான சாப்ட் படங்களிற்கு ஒவ்வாத இரைச்சல் அதிகம்.

படம் முழுக்க இளமை பொங்கும் வண்ணங்கள் பொங்கி வழிகிறது ஓளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் ஒளிப்பதிவில். காலேஜ் காம்பஸ் டாப் ஆங்கிள் காட்சிகளாகட்டும், பாடல் காட்சிகளாகட்டும், எங்கும் இளமை பொங்கி வழிகிறது. க்ளைமாக்ஸ் காட்சியில் ஒளிப்பதிவாளரும், எடிட்டரும் மற்றவர்களோடு இணைந்து உயிர் கொடுத்திருக்கிறார்கள்.
nb5பாடல்களோடு வசனத்தையும் எழுதியிருப்பவர் மதன் கார்க்கி. பெரும்பாலும் இந்தியில் பேசிய வசனங்களின் தமிழ் பதிப்பைத்தான் எழுதியிருக்கிறார். ஒரிரு காட்சிகளைத் தவிர. முக்கியமாய் டெக்னிக்கல் வார்த்தைகள் வரும் காட்சிகளிலும்,  க்ளைமாக்ஸில் மில்லிமீட்டர் தான் விஜய்யுடன் வந்த கதையை சுருக்கமாய் சொல்லுமிடத்தில் “திருக்குறள் அளவுல ஒரு ப்ளாஷ்பேக்கையே சொல்லிட்டான்பாரு” என்கிற வசனததை குறிப்பிடலாம். அதே போல் சத்யனின் மேடைப் பேச்சுக் காட்சி. கற்பிப்பு, கற்பழிப்பு என்ற வார்த்தை உல்டாக்களை வைத்து எழுதப்பட்ட அந்த ஐந்து நிமிட டயலாக் என்ன தான் இந்தியில் வந்த “சமத்கார்” “பலாத்கார்” என்பதன் உல்டா என்றாலும் பாராட்டுக்குறியது.

வழக்கமாய் தன் கதை திரைக்கதை இயக்கும் ஷங்கர் இம்முறை வேறொருவர் கதை, திரைக்கதையில் பயணித்திருக்கிறார். ஒரிரு பாடல் காட்சிகளைத்தவிர, அப்படியே இந்தி படத்தில் என்ன வந்ததோ அதையே பின்பற்றியிருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் வரும் ப்ரீ க்ளைமாக்ஸ் பிரசவக் காட்சியை எந்திரனில் பயன்படுத்தியிருப்பார். இந்தப்படத்தை அவர் எடுக்கப் போகிறார் என்றதும் இந்த காட்சிக்கு பதிலாய் என்ன செய்யப் போகிறார் என்ற ஒரு ஆவல் என்னுள் இருந்து கொண்டேயிருந்தது. கொஞ்சம் கூட அசராமல் அதே காட்சியை வைத்து ஒரிஜினல் படத்தில் கொடுத்த உணர்வுகளை சரியாகக் கன்வே செய்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். ஏன் ஒரிரு காட்சிகளில் ஷாட்களில் கூட அப்படியே எடுத்திருக்கிறார் என்பது இவரைப் போன்ற கேலிபர் உள்ள இயக்குனரின் தகுதிக்கு கொஞ்சம் மாற்றுக் குறைவேயானாலும், அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சில காட்சிகளை மாற்றிவிட்டு திரைக்கதை தங்கள் பெயரை போட்டுக் கொள்ளும் இயக்குனர்களிடையே, வேறொரு எழுத்தாளர் எழுதிய திரைக்கதைக்கு மரியாதை கொடுத்து அவருக்கு கிரெடிட் கொடுக்கும் தன்மையை பார்க்கும் போது மேன் மக்கள் மேன் மக்களே என்று பாராட்டத்தான் தோன்றுகிறது. என்ன இந்தியில் தான் ஒரிஜினல் எழுத்தாளர் சேத்தன்பகத்தின் பெயரை கடைசியில் போட்டார்கள். இப்படத்தில் அதையும் போடவில்லை. குறையென்று சொல்லப் போனால் கொஞ்சம் லெந்தியான முதல் பாதி, கொஞ்சம் ப்ரீசிங்காக வரும் வசனங்கள்.  இந்தியில் வந்தது போலவே ஆபீஸ் ரூமில் ஷேவ் செய்யும் காட்சியை கூட மாற்றாதது. மற்றும் இந்த மாதிரியான ராஜா டிரேட்மார்க் ரீமேக்கிற்கு ஷங்கர் அவசியமா?, படத்தின் நீளம் போன்ற சின்னச் சின்ன விஷயங்கள் பெரிதாக தெரியவில்லை.
நண்பன் – ஆல் ஈஸ் வெல்
சங்கர் நாராயண் @கேபிள் சங்கர்

No comments:

Post a Comment