Saturday, June 15, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு திரை விமர்சனம் - Theeya Velai seyyanum Kumaru Review

இந்த விமர்சனம் திரு.சங்கர்நாராயணன் அவர்களின்பதிவில் இருந்து சுடப்பட்டது :P
காதலித்து கல்யாணம் செய்து கொள்வதையே பரம்பரை பெருமையாய் கொண்ட  குடும்பத்தின் பெருமையை குலைப்பதற்காகவே பெண்கள், காதல் என்றாலே எட்டிக்காயாய் கசந்து திரியும் இளைஞனாய் வலைய வருகிறார் சித்தார்த். காரணம் பெண்களால் ஏமாற்றப்பட்டது வலி மிகுந்த நிகழ்வுகள். இவராய் காதலிக்கலாம் என்று நினைத்தாலும் ஒர்க்கவுட் ஆகாமல் இருக்கும் நேரத்தில் சந்தானம் என்கிற லவ் குருவின் கைடன்ஸில் தன் ஆபீஸில் புதியதாய் வேலைக்கு சேரும் ஹன்சிகாவை மடக்க எத்தனிக்கிறார். ஒரு கட்டத்தில் சந்தானத்தின் லவ் ஐடியாக்கள் ஓகே ஆகிவிடுகிறது.  அப்போதுதான் சந்தானத்திற்கு தெரிய வருகிறது சித்தார்த்துக்கு ஐடியா கொடுத்து மடிக்க சொன்ன பிகர் தன் தங்கை என்று. பின்பு அண்ணனாய் அவர்களின் காதல பிரிக்க முயற்சிக்கிறார் சந்தானம். பின்பு என்ன ஆனது என்பதுதான் கதை.

ஹன்சிகா இளைத்தாலும் நன்றாகவே இருக்கிறார். நடிப்பதற்கு என்று பெரிதாய் ஏதுமில்லை. சித்தார்த் அப்பாவி இளைஞன் கேரக்டருக்கு சரியாய் பொருந்துகிறார். ஆனால் ஏதோ ஒன்று மிஸ்ஸிங் இவரிடம். கணேஷ் வெங்கட்ராமனை ஆணழகன். அவனை அடைவதற்காக ஆபீஸில் உள்ள அத்துனை பெண்களும் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது போல் காட்டுகிறார்கள். ஆனால் நிஜத்தில் அவரைப் பார்க்கும் போது படத்தில் ஆர்.ஜே பாலாஜி “செல்வராகவன் படத்தின் செகண்ட் ஹீரோ போல இருக்கான்” என்றும், சித்தார்த் “ ஜிம்முக்கு போய்ட்டு வந்த ஜெமினி கணேசன்” என்றும் ஆளாளுக்கு கலாய்க்கிறார்கள். பாஸ்கி, தேவிப்ரியா, மனோபாலா, வித்யா, மற்றும் ரெண்டு மூன்று சூப்பர் பிகர்கள் என்று ஏகப்பட்ட நடிகர்கள். மனோபாலாவும், சந்தானமும் ப்ராத்தல் ஹவுசில் அடிக்கும் லூட்டி செம காமெடி. வித்யாராம் = சந்தானம் காதல் முறியும் காட்சி செம.
படத்தின் ஹீரோ சந்தானம் என்றே சொல்லலாம். படம் ஆரம்பிக்கவே இருபது நிமிஷத்திற்கு மேல் ஆகிவிடுகிறது. சந்தானத்தின் அறிமுகம் தான் கொஞ்சம் ரிலாக்ஸாக, அவர் கொடுக்கும் லவ் குரு ஐடியாக்கள் சிலது சுவாரஸ்யம். ஆனால் தன் தங்கையைத்தான் சித்தார்த் காதலிக்கிறார் என்றதும், அவர்களை பிரிக்க, அவர் செய்யும் ஐடியாக்கள் கிச்சு கிச்சு மூட்ட உதவுகிறது. அதிலும், தங்கையைப் பற்றியும் அவரது குடும்ப ப்ளாஷ்பேக்கை சொல்ல தமிழ் நாடு பூராவும் பைக்கில் ஓட்டி வீட்டின் வாசலில் வந்து நின்று அப்பா சித்ரா லட்மணனிடம் சண்டை போடும் காட்சியெல்லாம் படு நீளம். சித்தார்த்தின் வீட்டிற்குள் வந்து விக்ரமன் படத்தை ஞாபகப்படுத்தும் காட்சிக்கு சிரிக்காமல் இருக்க முடியாது. ரேடியோ ஜாக்கி பாலாஜியின் பஞ்ச்கள் ஆங்காங்கே புன்னகை பூ பூக்க வைக்கிறது.
கோபி அமர்நாத்தின் ஒளிப்பதிவு படத்தின் யூத்ஃபுல் இமேஜிக்கு உதவியிருக்கிறது. ஸ்டைலிஷான ப்ரேமிங், ஸூத்திங் கலர்  என்று அழகாய் செய்திருக்கிறார். குறிப்பிட்டு சொல்ல வேண்டியது ப்ரவீன் ஸ்ரீகாந்தின் எடிட்டிங். செம ஸ்டைலிஷாக இருக்கிறது. இசை சத்யா. அழகென்றால் அவள் தானா கொஞ்சம் கேட்க நன்றாக இருக்கிறது. கொழ கொழன்னு என்று ஆரம்பிக்கும் பாடலின் ஆரம்ப வரிகள் கொடுத்த ஈர்ப்பு அதன் பிறகு வரும் சரணத்தில் இல்லவேயில்லை. ஆர்.ஆர். கூட கொஞ்சம் சுமார் என்றே சொல்ல வேண்டும். 

திரைக்கதையில் உதவி, மற்றும் வசனமெழுதியவர்கள் சூது கவ்வும் நலன் குமாரசாமி மற்றும் சீனி. ஆங்காங்கே திரைக்கதையில் வரும் லவ் ஐடியாக்கள், மற்றும் சில பஞ்ச் லைன்கள்  இவர்களை கோடிக் காட்டுகிறது.   சுந்தர் சி படமென்றால் அதிரி புதிரி க்ளைமாக்ஸாய் இருக்கும் என்று பழக்கப் பட்டிருக்கும் மக்களுக்கு இப்படத்தின் க்ளைமாக்ஸ் கொஞ்சம் சுமார் என்றே சொல்ல வேண்டும். ஆங்காங்கே இறங்கும் திரைக்கதையை சந்தானத்தை வைத்து சரி செய்ய முயன்றிருக்கிறார்கள். சந்தானத்திற்காக மட்டுமென்றால் ஓகே.

இடம் : http://www.cablesankaronline.com/2013/06/blog-post_15.html

No comments:

Post a Comment