Sunday, August 11, 2013

தலைவா (2013)

லைவா பல தடைகளை (!!) தாண்டி தமிழ்நாட்டுல ரீலீஸ் ஆகாம வெளிநாட்டில் ரீலீஸ் ஆகி இருக்கிறது. ஒரு படத்தின் பப்ளிசிட்டிக்காக இப்ப இப்ப படக்குழுவினர் எத்தனையோ புது புது ஐடியாவுல ஸ்டன்ட் அடிச்சு பார்த்து இருக்கேன், சமிபத்தில் தங்க மீன்கள் ராம் கூட புது விதமா "படம் ரீலீஸ் பண்ண காசு இல்லைங்கிற" மாதிரி டீசர் வெளியீட்டு இருந்தார், ஏதோ இப்ப தான் அவருக்கு படம் எடுக்க காசு தேவை என்கிற ரகசியம் தெரிஞ்ச மாதிரி. ஆனா அது கூட நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை பற்றிய ஆர்வத்தை உண்டு பண்ணியது. ஆனா தலைவா பட குழுவினர் அடிச்ச ஸ்டன்ட் பழைய எம்.ஜி.யார் காலத்து "தியேட்டர்ல பாம் வைப்போம்" டெக்னிக், அதை பார்த்தவாது நாங்க கொஞ்சம் உஷார் ஆகி இருக்கனும், ஆனா விதி யாரை விட்டுச்சு. பப்ளிசிட்டி ஸ்டன்ட் மட்டும் பழைய எம்.ஜி.யார் காலத்து டெக்னிக் இல்ல, படமும் அரத பழசான கதையை கொண்டு வெளி வந்து இருக்கு. நாங்களா வான்டட்டா போய் வண்டியில ஏறுனது எங்க தப்பு தான். 


நான் பெரிய விஜய் பேன்னாக இல்லாட்டியும், விஜய்யோட எல்லா படத்தையும் முத நாள் பாத்திருவேன், கடந்த அஞ்சு வருஷமா ரீலீஸ் ஆனா எல்லா விஜய் படத்தையும் முத நாள் பார்க்கிற பாக்கியம் கிடைச்சு இருக்கு. துப்பாக்கி மட்டும் மிஸ் ஆகிருச்சு, அதுக்கு காரணம் அப்ப நான் சொந்த கிராமத்துல இருந்தேன், படத்துக்கு தாறுமாறான கூட்டம். எங்க ஊருல ஹவுஸ் புல் போர்டு மாட்டுன வெகு சில படங்களில் துப்பாக்கியும் ஒன்னும். வில்லு, வேட்டைக்காரன், சுறான்னு விஜய் மொக்கை மொக்கையா படம் குடுத்துகிட்டு இருந்தப்பவும் நான் விடாம விஜய் மேல நம்பிக்கை வச்சு படத்துக்கு போய்கிட்டே இருந்தேன். கடைசியா காவலன், நண்பன், துப்பாக்கின்னு நல்ல படங்கள் குடுக்க ஆரம்பிச்ச விஜய் மறுபடியும் பேக் டூ ஸ்குயர் ஒன் மாதிரி, அவர் அப்பாவோட அரசியல் பேராசையில மோசமான மொக்கை படத்தை "தலைவா" மூலமா குடுத்து இருக்கார். நான் இது வரை பார்த்த விஜய் படங்களிலே "தமிழன்" என்கிற காவியத்தை தான் டாப் வொர்ஸ்ட் லிஸ்ட்ல வச்சு இருந்தேன், இப்ப அந்த இடத்தை அன்ன போஸ்ட்ல "தலைவா" பிடிச்சு இருக்கு. வாழ்த்துக்கள் விஜய்.

 இன்னைக்கு கூட சாண்டியாகோவுல "தலைவா" ரீலீஸ் ஆகுமா இல்லையா என்கிற சந்தேகம் இருந்தது, கடைசி நேரத்துல தான் படம் ரீலீஸ் என்கிற அறிவிப்பு தியேட்டர்ல இருந்து வந்தது. எங்க கம்பெனி தமிழ் மக்கள் மொத்த கூட்டமும் தியேட்டர்ல தான் இருந்தது, இத்தனைக்கும் நாளைக்கு ஆபீஸ் வேற. விஜய்க்கு இங்க இருக்கிற ரசிகர் கூட்டம் உண்மையிலே பெரிய ஆச்சிரியமா விஷயம் தான். அவங்களை மனசுல வச்சுகிட்டாவது விஜய் இது மாதிரியான படங்களை தவிர்ப்பது நல்லது. 


படத்தோட கதையை கொஞ்சம் சினிமா ஞானம் உள்ளவங்க ட்ரைலர் வச்சே சொல்லிருவாங்க. விஜய் அப்பா அண்ணா (சத்யராஜ்) மும்பையில வாழுற ஏழைகளின் காப்பாளன், விடிவெள்ளி, கலியுக கர்ணன், ரொம்ப குழம்பாதீங்க சினிமா பாஷையில பெரிய டான். அவரோட பையன் தான் விஷ்வா (விஜய்). அப்பாவோட பிஸினெஸ் பத்தி தெரியாம ஆஸ்திரேலியாவுல வாழுறார். அங்க டான்ஸ் குரூப் வச்சு நடத்திகிட்டு ஜாலியா ப்ரிண்ட்ஸ் கூட சந்தோஷமா இருக்கிறார். தமிழ் பெண்னான் அமலாபாலை லவ்வி, தன்னோட கல்யாணத்தை பத்தி பேச இந்தியா வரார். வந்த எடத்துல அவர் கண்ணு முன்னாலே "அண்ணாவை" வழக்கம் போல் சமூக விரோதிகள் கொன்று விடுகிறார்கள். வழக்கம் போல் விஜய் விரோதிகளை அழித்து மும்பை தமிழர்களை காப்ற்றி, விஷ்வாவில் இருந்து எப்படி விஷ்வா "பாய்" ஆகிறார் என்பதை இழு இழு என்று ஜவ்வு போல் இழுத்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் "விஜய்".

இளைய தளபதி விஜய் அட்டகாசமாய் எல்லாம் நடிக்கல, தனக்கு என்ன வருமோ அதை மட்டும் செஞ்சு இருக்கார். அவருக்கு நல்லா வரது டான்ஸ் மட்டும் தான். செமையா டான்ஸ் ஆடி இருக்கார். உணர்ச்சி பூர்வமான் இடத்துல இவர் பேசுற நிறைய வசனம் சிரிப்பை தான் வரவழைக்குது, டிவி சீரியல கூட வர லாயக்கு இல்லாத வசனங்கள். "தம்பி நல்லா படிச்சா பரீட்சையில் நல்ல மார்க் எடுக்கலாம்" டைப் வசனங்கள். இந்த மாதிரி மொக்கை வசங்களை விஜய் என்ன தான் எமோஷனலா பேசினாலும் அது நம்ம பொறுமையை ரொம்பவே சோதிக்கிறது. வசனம் எழுதுன ஆளுக்கு கையிலே ரெண்டு போடு போடணும்.


இளைய தளபதி விஜய் ஏன் எல்லா படத்திலும் ஒரே மாதிரியான கெட் அப்ல வராரு, கெட் அப் சேன்ஜ் பண்ணுறதே இல்லைன்னு கேட்கிற ஆளுகளுக்கு கிளைமாக்ஸ் காட்சியில ஒரு கெட் அப் போட்டுக்கிட்டு வராரு பாருங்க. சுறா சிங் கெட் அப் தோத்தது. தியேட்டரே விழுந்து விழுந்து சிரிச்சது. படத்தோட பெஸ்ட் காமெடி சீன் அது தான். சுறாவுக்கு முன் வந்த விஜய் படங்க மாதிரி பஞ்ச் டயலாக் எல்லாம் பேசி நம்மளை வதைக்கிறது இந்த படத்துல இல்லாதது பெரிய ஆறுதல்.படத்தோட கதையை ஓகே பண்ணுனது எஸ்.ஏன்னு படிச்சேன். தளபதி ஒரு அஞ்சு வருஷம் அவங்க அப்பாவை ஊரை விட்டு தள்ளி வச்சுறது நல்லது. சனியை கூடவே வச்சுகிறது ரொம்ப ரொம்ப ஆபத்து. 

படத்தோட கதாநாயகி அமலா பால். நடிப்பை வெளிபடுத்த பெரிய வாய்ப்பெல்லாம் இல்லை. வழக்கமான் தமிழ் பட ஹீரோயின் வேலையை சரியா செஞ்சு இருக்காங்க. நிறைய காட்சியில மேக் அப் இல்லாம வந்து மரண பயத்தை உண்டு பண்ணுறாங்க. இடைவேளைக்கு முன்னாடி வர ட்விஸ்டுக்கு பயன்படுத்த பட்டு இருக்காங்க. மற்ற படி  பெருசா சொல்லிக்கிற மாதிரி ஒன்னும் இல்ல. சத்யராஜ் போன்ற நல்ல நடிகரை வேஸ்ட் செஞ்சு இருக்காங்க. இவர் பேசுற வசனங்கள் கொட்டாவியை தான் வர வைக்குது. ஏதோ ஸ்கூல் ஹெட்மாஸ்டர் மாதிரி வந்துட்டு போறார். 

படத்தை முதல் பாதியில் அப்புறம் இரண்டாம் பாதியில பாதிக்கு மேல வந்து படத்தையும் நம்மளையும் காப்பாதிறது சந்தானம் மட்டும் தான். இயக்குனர் விஜய்க்கு இந்த படத்திலும் சந்தானம் தான் கை குடுத்து இருக்கார். ஒரு டபிள் மீனிங் வசனம் தவிர சந்தானம் ரொம்பவே அடைக்கி வாசித்து இருக்கார். ஒரு காட்சியில் "சாம்  ஆண்டர்சன்" வேற வராரு, சாம் வர காட்சியை கொஞ்சம் சுவாரிசியமா குடுத்து இருக்கலாம்.


படத்துல பின்னணி இசை ரொம்பவே கொடூரமாய் இருந்தது. விஜய் பாடும் "வாங்கன்னா" பாட்டு தவிர எந்த பாட்டுமே மனதில் பதியவில்லை. "தலைவா தலைவா" பாட்டு ஒரு மாஸ் பாட்டை எப்படியெல்லாம் படம் ஆக்க கூடாது என்பத்ருக்கு நல்ல எடுத்துகாட்டு.

 "பாட்ஷா+நாயகன் = தலைவா", இது தான் நம்ம படத்துக்கு பார்முலான்னு சொல்லி தான் இயக்குனர் விஜய் தளபதியை ஏமாத்தி இருப்பார்ன்னு நினைக்கிறன். டைரக்டரோட சுடுற திறமை ஊர் அறிஞ்சது தான், தனக்கு என்ன வருமோ அதை சரியா செஞ்சா வெற்றி நிச்சியம், ஊர் சொல்லுறதுகாக நம்மளை மாத்திக்கிட்டு நமக்கு தெரியாதை வராததை செஞ்சா பல்பு தான் கிடைக்கும். இயக்குனர் விஜய் பேசமா சர்க்கார் இல்லாட்டி காட் பாதர் படத்தை சுட்டு எடுத்து இருக்கலாம், சொந்தமா சீன் யோசிச்சு எடுத்தா இப்படி தான் மண்ணை கவ்வ வேண்டியது வரும். அடுத்த படத்தையாவது உருபடியா சுட்டு எடுங்க விஜய் சார்.

இளைய தளபதி விஜய்க்கு ஒரு வேண்டுகோள், உங்க அப்பா பேச்சை கேட்டு நடிக்காம நல்ல இயக்குனர் மற்றும் நல்ல கதைகளில் நடிங்க, இல்லாட்டி சாமீ நீங்க பேசாம அரசியலுக்கே போயிருங்க !!! நாங்க பாவம்.

My Rating: 5.5/10.

No comments:

Post a Comment